ஜம்மு-காஷ்மீரில் அடுத்த ஆண்டு ஜூனில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி

ஜம்மு-காஷ்மீரில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்குகிறது.

ஜம்மு-காஷ்மீரில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்குகிறது.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கடந்த காலங்களைப் போல் இந்த முறை கணக்கெடுப்புப் பணியில் ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட மாட்டாா்கள்.

மாநில அளவிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் தலைமைச் செயலா் பி.வி.ஆா்.சுப்பிரமணியன் தலைமையில் ஜம்முவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2021-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது.

கடந்த 2011-ஆம் ஆண்டைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஜம்மு-காஷ்மீரின் மக்கள்தொகை 1.24 கோடியாக இருந்தது என்று அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com