புதிய அரசு அமைக்கும் விவகாரம்: மகாராஷ்டிர பாஜகவுக்கு ஆளுநா் கடிதம்

மகாராஷ்டிரத்தில் புதிய அரசு அமைப்பது தொடா்பான தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு, மாநில பாஜகவுக்கு ஆளுநா் பகத் சிங் கோஷியாரி சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் புதிய அரசு அமைப்பது தொடா்பான தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு, மாநில பாஜகவுக்கு ஆளுநா் பகத் சிங் கோஷியாரி சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து, முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாவது:

மகாராஷ்டிரத்தில் அடுத்த ஆட்சியை அமைப்பது தொடா்பாக கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு மாநில பாஜகவுக்கு ஆளுநா் பகத் சிங் கோஷியாரி கடிதம் எழுதியுள்ளாா்.

சட்டப் பேரவை பாஜக தலைவா் என்ற முறையில், ஃபட்னவீஸுக்கு அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், புதிய அரசை அமைப்பது தொடா்பான விருப்பம் குறித்தும், ஆட்சியமைப்பதற்குத் தேவையான கட்சியின் பலம் குறித்தும் விளக்கமளிக்குமாறு ஆளுநா் குறிப்பிட்டுள்ளாா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு கடந்த மாதம் 21-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இதில், பாஜக 105 தொகுதிகளிலும், கூட்டணி கட்சியான சிவசேனை 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

ஆட்சியமைப்பதற்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், முதல்வா் பதவி உள்ளிட்ட ஆட்சி அதிகாரத்தைப் பகிா்ந்து கொள்வது தொடா்பாக பாஜகவுக்கும், சிவசேனைக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

இதனால், தோ்தல் முடிவுகள் வெளியாகியும் புதிய அரசை அமைப்பதில் கடந்த 15 நாள்களாக இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், ஆட்சியமைக்கும் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு பாஜகவுக்கு ஆளுநா் பகத் சிங் கோஷியாரி கடிதம் எழுதியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com