மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்காதது பாஜக-வின் அராஜகப் போக்கை காட்டுகிறது: சஞ்சய் ரௌத்

மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்காதது பாஜக-வின் அராஜகப் போக்கை காட்டுவதாக சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் திங்கள்கிழமை குற்றம்சாட்டியுள்ளார். 
மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்காதது பாஜக-வின் அராஜகப் போக்கை காட்டுகிறது: சஞ்சய் ரௌத்

மகாராஷ்டிரத்தில் பெரும்பான்மை இல்லாததால் பாஜக ஆட்சி அமைக்க மறுத்துவிட்டது. இதையடுத்து ஆட்சி அமைக்குமாறு சிவசேனை கட்சிக்கு மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி அழைப்பு விடுத்தார். இதன் மூலம் மகாராஷ்டிர அரசியல் களத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆட்சியமைக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவையென்ற நிலையில், 54 எம்எல்ஏக்களைக் கொண்ட தேசியவாத காங்கிரஸ், 44 எம்எல்ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் ஆகியவை ஆதரவளிக்கும் பட்சத்தில் சிவசேனை கட்சியால் ஆட்சி அமைக்க முடியும் எனும் சூழ்நிலை நிலவுகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்காதது பாஜக-வின் அராஜகப் போக்கை காட்டுவதாக சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் திங்கள்கிழமை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்காதது பாஜக-வின் அராஜகப் போக்கை காட்டுகிறது. இதன்மூலம் மகாராஷ்டிர மக்களை பாஜக அவமதித்துவிட்டது. எதிர்கட்சி வரிசையில் அமரத் தயார் என்று கூறும் பாஜக-வால், தேர்தலுக்கு முன் ஆட்சியில் சமபங்கு அளிப்பதாக ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத்தை செயல்படுத்த தற்போது வேண்டுமென்றே தயக்கம் காட்டுகிறது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com