ஜே.என்.யூ  மாணவர்கள் போராட்டம்
ஜே.என்.யூ மாணவர்கள் போராட்டம்

மாணவர்களின் போராட்டத்தை அடுத்து தில்லி ஜவஹர்லால் பல்கலை., கட்டண உயர்வு வாபஸ்

மாணவர்களின் போராட்டத்தை அடுத்து தில்லி ஜவஹர்லால் பல்கலைகழக கட்டண உயர்வு வாபஸ் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது தில்லி: மாணவர்களின் போராட்டத்தை அடுத்து தில்லி ஜவஹர்லால் பல்கலைகழக கட்டண உயர்வு வாபஸ் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் தில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தெரிவித்த பல்கலை மாணவர்கள் அமைப்பினர், 'பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் கல்விக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 15 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறோம். இங்கு பயிலும் மாணவர்களில் குறைந்தபட்சம் 40 சதவீத மாணவர்கள் ஏழ்மைப் பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவர்களால் எவ்வாறு தங்கள் மேற்படிப்பை தொடர முடியும்? ' என்றுகேள்வி எழுப்பினார்கள்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட ஜே.என்.யூ. மாணவிகளை பெண் காவலர்கள் சரமாரியாக தள்ளி அப்புறப்படுத்தினர். அதேபோல மாணவர்களுக்கும் - பாதுக்காப்புப்படையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. 

அதையடுத்து கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்திய தில்லி ஜவஹர்லால் பல்கலை மாணவர்கள்,  மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியாலை திங்கள் மாலை சந்தித்துப் பேசினார்கள்.

மாணவர் பிரதிநிதிகள் நான்கு பேரை அழைத்து அவர்களது கோரிக்கைகளை ரமேஷ் போக்ரியால் கேட்டறிந்தார்; அதையடுத்து போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தங்கள் கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக மத்திய அமைச்சரிடம் வழங்கினர்.

இந்நிலையில் மாணவர்களின் போராட்டத்தை அடுத்து தில்லி ஜவஹர்லால் பல்கலைகழக கட்டண உயர்வு வாபஸ் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தில்லி ஜவஹர்லால் பல்கலைகழக நிர்வாகம் புதன் மாலை வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com