சட்டவிரோத பணப்பரிமாற்றம்: பெங்களூரு அம்னஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனத்தில் சிபிஐ சோதனை

பெங்களூருவில் உள்ள அம்னஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம்: பெங்களூரு அம்னஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனத்தில் சிபிஐ சோதனை

வெளிநாடு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தை (எஃப்.சி.ஆர்.ஏ) மீறிய வழக்கில் பெங்களூருவில் உள்ள அம்னஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.

அம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா பெங்களூரு நிறுவனத்தின் கணக்குகளின் புத்தகங்களை உள்துறை அமைச்சகம் பரிசோதித்ததில், அந்நிறுவனம் லாப நோக்கற்ற செயல்பாடுகளுக்கு இணங்காத, ஆனால் எஃப்.சி.ஆர்.ஏ இன் கீழ் தடைசெய்யப்பட்ட அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அம்னஸ்டி இன்டர்நேஷனல் (யுகே) ரூ. 10 கோடியை (தோராயமாக) அம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் பெங்களூரு கிளையின் கடன் பத்திரங்களுக்கு சந்தா செலுத்துவதன் மூலம் சட்டவிரோதமாக அந்நிய நேரடி முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளதாக சிபிஐ தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com