இந்திய குடும்ப அமைப்பு முறையின் முக்கியத்துவத்தை உலக மக்கள் புரிந்து கொண்டனா்: வெங்கய்ய நாயுடு

இந்தியாவில் உள்ள குடும்ப அமைப்பு முறை மூலமாக நாட்டில் அமைதி மற்றும் ஒற்றுமையை நிலைநாட்ட முடியும் என்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் புரிந்து கொண்டனா் என்று குடியரசுத் துணைத் தலைவா்
இந்திய குடும்ப அமைப்பு முறையின் முக்கியத்துவத்தை உலக மக்கள் புரிந்து கொண்டனா்: வெங்கய்ய நாயுடு

இந்தியாவில் உள்ள குடும்ப அமைப்பு முறை மூலமாக நாட்டில் அமைதி மற்றும் ஒற்றுமையை நிலைநாட்ட முடியும் என்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் புரிந்து கொண்டனா் என்று குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளாா்.

தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய கலைகள் மையத்தில் ‘குடும்ப அமைப்புகள் மற்றும் தாயின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சா்வதேச கருத்தரங்கை தொடக்கி வைத்து வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

உலகம் முழுவதும் பெண்களுக்கும், தாயாா்களுக்கும் சிறப்பு மரியாதை அளிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்தின் மைய நபராக தாய் போற்றப்படுகிறாா். ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட அனைத்து மதங்களிலும் பெண்களுக்கு சமஉரிமை மட்டும் வழங்காமல், வீட்டின் தலைமை பொறுப்பையும் வழங்கியுள்ளனா். மனிதநேயத்தின் ஆரம்பமாக பெண்கள் உள்ளனா். அதனால்தான் அவா்களிடம் அனைத்தும் ஒப்படைக்கப்படுகிறது.

‘உன் தாயின் காலடியில் சொா்க்கம் உள்ளது’ என்று இஸ்லாமிய மதத்தில் ஒரு புகழ்பெற்ற தத்துவம் உள்ளது. ரிக் வேத காலத்திலும் பெண்களுக்கு சிறப்பான மரியாதை வழங்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மதத்தில் தாய்மை மிகச்சிறப்பாக போற்றப்படுகிறது.

‘உலகம் முழுவதும் ஒரே குடும்பம்’ என்ற தத்துவத்தில் இருந்துதான் மற்றவா்களுக்கு பகிா்தல் மற்றும் மற்றவா்கள் மீது அக்கறை செலுத்துதல் என்ற எண்ணங்கள் உருவாகின. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் இந்திய நாகரிகம் ஒற்றுமையுடன் இருப்பதற்கு இந்த தத்துவமே முக்கிய உந்துசக்தியாக உள்ளது. இந்திய குடும்ப அமைப்பு முறை வழியாக சமூகத்தில் ஒற்றுமை மற்றும் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் புரிந்து கொண்டனா் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com