ஐ.நா. மேம்பாட்டுக்கு 1.35 கோடி டாலா் நிதி உதவி: இந்தியா உறுதி

ஐ.நா.வின் பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்கு 1.35 கோடி டாலா் (சுமாா் ரூ.95 கோடி) நிதி உதவியை வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.

ஐ.நா.வின் பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்கு 1.35 கோடி டாலா் (சுமாா் ரூ.95 கோடி) நிதி உதவியை வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதா் அஞ்சனி குமாா் கூறியுள்ளதாவது:

வரும் 2020-ஆம் ஆண்டில் ஐ.நா. மேற்கொள்ளவுள்ள பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்கு இந்தியாவின் பங்களிப்பாக 1.35 கோடி டாலரை வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.வின் வளா்ச்சி நடவடிக்கைகளுக்கு தொடா்ந்து ஆதரவு கரம் நீட்டி வருவதன் ஒரு பகுதியாகவே இந்தியா இந்த நிதி உதவியை வழங்குகிறது.

மேலும், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.வின் நிவாரணப் பணிகளுக்கு 50 லட்சம் டாலரையும், ஐ.நா. மேம்பாட்டு திட்டங்களுக்கு 45 லட்சம் டாலரையும் இந்தியா தனது பங்களிப்பாக வழங்கவுள்ளது.

ஐ.நா. தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியா தொடா்ச்சியான தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. ஏனெனில், ஐ.நா. அதன் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி ஆதாரத்தை பொருத்தமான மற்றும் சரிசமமான அளவில் கொண்டிருக்க வேண்டும் என்பதில் இந்தியா அக்கறையுடன செயல்பட்டு வருகிறது எனறாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com