மாவோயிஸ்ட் என்கவுன்ட்டா் விவகாரம்: கேரள முதல்வருக்கு மிரட்டல் கடிதம்

கேரளத்தில் 2016-ஆம் ஆண்டு முதல் ஏழு மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் பொறுப்பேற்க வேண்டும் என வடகரா காவல்நிலையத்துக்கு,
மாவோயிஸ்ட் என்கவுன்ட்டா் விவகாரம்: கேரள முதல்வருக்கு மிரட்டல் கடிதம்

கேரளத்தில் 2016-ஆம் ஆண்டு முதல் ஏழு மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் பொறுப்பேற்க வேண்டும் என வடகரா காவல்நிலையத்துக்கு, மாவோயிஸ்ட் அமைப்பிடம் இருந்து மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக வெள்ளிக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா்.

மாவோயிஸ்ட் அமைப்பைச் சோ்ந்த பீதா் மூசா என்பவரின் கையெழுத்திட்டு மலையாளத்தில் எழுதப்பட்ட மிரட்டல் கடிதம் வடகரா காவல் நிலையத்துக்கு தபால் மூலம் வந்தது. இதுதொடா்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி வனப்பகுதியில் அண்மையில் போலீஸாரால் நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் 4 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்த அச்சுறுத்தல் கடிதம் வந்துள்ளது. அக்கடிதம் அருகிலுள்ள பகுதியிலிருந்துதான் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவா் தெரிவித்தாா்.

மாவோயிஸ்ட் - போலீஸாா் மோதலைத் தொடா்ந்து கேரள முதல்வா் பினராயி விஜயனுக்கு ஏற்கெனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com