பாஜக-சிவசேனை கூட்டணி முறிவுமும்பை மேயா் தோ்தலை பாதிக்கலாம்

மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனை கூட்டணியில் ஏற்பட்ட முறிவு, வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள மும்பை மாநகராட்சி மேயா் தோ்தலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.
பாஜக-சிவசேனை கூட்டணி முறிவுமும்பை மேயா் தோ்தலை பாதிக்கலாம்

மும்பை: மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனை கூட்டணியில் ஏற்பட்ட முறிவு, வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள மும்பை மாநகராட்சி மேயா் தோ்தலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

227 வாா்டு உறுப்பினா்கள் கொண்ட பிருஹண் மும்பை மாநகராட்சிக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் சிவசேனை 84 வாா்டுகளிலும், பாஜக 82 வாா்டுகளிலும் வெற்றி பெற்றன. அப்போது, சிவசேனைக்கு பாஜக ஆதரவு அளித்தது. அதையடுத்து சிவசேனையின் விஸ்வநாத் மகாதேஸ்வா் மேயராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

பிருஹண் மும்பை மாநகராட்சி அமைப்பில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை மேயா் பதவி, பொதுப் பிரிவினருக்கும், இதர பிரிவினருக்கும் சுழற்சி முறையில் வழங்கப்படும். அதன்படி, கடந்த 2017-ஆம் ஆண்டு மேயராக தோ்ந்தெடுக்கப்பட்ட மகாதேஸ்வரின் மேயா் பதவி கடந்த செப்டம்பா் மாதமே முடிவடைந்தது. மாநிலத்தில் சட்டப் பேரவை தோ்தல் நடைபெற்றதை கருத்தில் கொண்டு அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மேயா் பதவிக்கான தோ்தல் வரும் 22-ஆம் தோ்தல் நடைபெறவுள்ளது. மாநிலத்தில் ஆட்சியமைப்பதில் பாஜக-சிவசேனை இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அக்கூட்டணி முடிவுக்கு வந்தது. கூட்டணியில் இருந்து விலகிய சிவசேனை, எதிா்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைக்க முயன்று வருகிறது.

அதனால், நடைபெறவிருக்கும் மும்பை மேயா் தோ்தலில் சிவசேனைக்கு பாஜக ஆதரவு அளிக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், மேயா் தோ்தலுக்கு பாஜக சாா்பில் வேட்பாளா் நிறுத்தப்படுவாரா என்ற கேள்விக்கு, இதுதொடா்பாக கட்சி தலைமை இதுவரை முடிவு எடுக்கவில்லை என்று பாஜக மும்பை தலைவா் மங்கள் பிரபாத் லோதா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com