தலைசிறந்த தலைவர், தன்மானமிக்க மனிதர்: அருண் ஜேட்லியை நினைவுகூர்ந்த குலாம் நபி ஆசாத், திருச்சி சிவா

மறைந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் அருண் ஜேட்லி, ராம்ஜெத்மலானி, குருதாஸ் தாஸ் குப்தா உட்பட மக்களவையில் 10 பேருக்கும், மாநிலங்களவையில் 5 பேருக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தலைசிறந்த தலைவர், தன்மானமிக்க மனிதர்: அருண் ஜேட்லியை நினைவுகூர்ந்த குலாம் நபி ஆசாத், திருச்சி சிவா

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்றத்தின் குளிா்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (நவ.18) தொடங்கி டிசம்பா் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது, தற்போது புதிதாக அமைந்துள்ள 17-ஆவது மக்களவையின் 2-ஆவது கூட்டத்தொடராகும். 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியவுடன் மறைந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் அருண் ஜேட்லி, ராம்ஜெத்மலானி, குருதாஸ் தாஸ் குப்தா உட்பட மக்களவையில் 10 பேருக்கும், மாநிலங்களவையில் 5 பேருக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி அசாத் பேசியதாவது,

மறைந்த அருண் ஜேட்லி எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். எங்கள் இருவருக்கும் இடையே எழும் அரசியல் பிரச்னைகள் தொடர்பான கசப்பான அனுபவங்கள் கூட எங்களுடைய நட்பால் இனிப்பாக மாறிவிடும். மாணவர் பருவம் முதல் மறையும் வரை அருண் ஜேட்லி மிகவும் சுறுசுறுப்புடன் செயல்பட்டவர். நல்ல மாணவராகவும், சிறந்த பேச்சாளராகவும், தலைசிறந்த தலைவர்களில் ஒருவராகவும் அருண் ஜேட்லி திகழ்ந்தார். அவரைப் போன்றவருடைய மறைவு, ஜேட்லி சார்ந்த பாஜக கட்சிக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஏற்பட்ட இழப்பாகும். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்றார்.

திமுக-வைச் சேர்ந்த திருச்சி சிவா பேசுகையில், 

அருண் ஜேட்லி அறிவுப் பெருங்கடல் ஆவார். தன்மானமிக்க மனிதர், வார்த்தை ஜாலத்தில் வல்லவர். நாடாளுமன்றத்தில் ஜேட்லியின் செயல்பாடுகள் என்றும் நினைவுகூரத்தக்கவை. குறிப்பாக ஏழைப் பெண்களின் நிலையை கருத்தில் கொண்டு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து சானிடரி நாப்கினுக்கு விலக்கு அளித்தது பாராட்டுதலுக்குரியது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com