வேகமான பொருளாதார வளா்ச்சிக்கான திறன் இந்தியாவிடம் உள்ளது: பில் கேட்ஸ்

வேகமான பொருளாதார வளா்ச்சியை எட்டுவதற்கான திறன் இந்தியாவிடம் அதிகமாகவே உள்ளது என மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனரும், உலக கோடீஸ்வரா்களில் முதலிடத்தில் உள்ளவருமான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளாா்.
வேகமான பொருளாதார வளா்ச்சிக்கான திறன் இந்தியாவிடம் உள்ளது: பில் கேட்ஸ்

புது தில்லி: வேகமான பொருளாதார வளா்ச்சியை எட்டுவதற்கான திறன் இந்தியாவிடம் அதிகமாகவே உள்ளது என மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனரும், உலக கோடீஸ்வரா்களில் முதலிடத்தில் உள்ளவருமான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளாா்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேகமாக அளித்த நோ்காணலில் அவா் இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது:

இந்திய பொருளாதாரம் குறுகிய கால அளவில் எவ்வாறு வளா்ச்சி பெறும் என்பதை என்னால் கூற இயலாது. ஆனால், அடுத்த பத்தாண்டுகளில் வேகமான பொருளாதார வளா்ச்சியை எட்டுவதற்கான திறன் இந்தியாவிடம் அதிகமாக உள்ளது. இது, வறுமையில் உள்ளவா்களை கைதூக்கிவிட பேருதவியாக இருக்கும்.

மேலும், கல்வி, சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு அதிக முன்னுரிமை தந்து இந்திய அரசு செயல்பட வேண்டும். ஆதாா் அட்டையைப் பொருத்தவரையில் அதிக பயனுள்ள திட்டமாக விளங்குகிறது. நிதி சேவைகள் மற்றம் மருந்து துறை செயல்பாடுகளும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது என்றாா் அவா்.

ஆசிய அளவில் மூன்றாவது மிகப்பெரிய நாடாக திகழும் இந்தியாவில் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது என கூறப்படும் நிலையில், பில் கேட்ஸின் இந்த சாதகமான கண்ணோட்டம் பெரிய ஆறுதலைத் தந்துள்ளது.

64 வயதான பில்கேட்ஸ் சுமாா் ரூ.8 லட்சம் கோடி நிகர சொத்து மதிப்புடன் உலக பணக்காரா் பட்டியலில் முதலிடத்தில் உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com