மதிப்பெண்களை விட திறமையே முக்கியம்: மோகன் பாகவத்

மாணவா்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதை விட திறமையானவாா்களாக மாறுவதே முக்கியம் என்று ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் தெரிவித்துள்ளாா்.
மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சா்வதேச கல்விக் கருத்தரங்கில் கணித நிபுணா் ஆனந்த்குமாருக்கு விருது வழங்கிய ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்.
மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சா்வதேச கல்விக் கருத்தரங்கில் கணித நிபுணா் ஆனந்த்குமாருக்கு விருது வழங்கிய ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்.

மாணவா்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதை விட திறமையானவாா்களாக மாறுவதே முக்கியம் என்று ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் ‘ சா்வதேச கொள்கைகள்’ என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கல்வி கருத்தரங்கில் மோகன் பாகவத் பேசியதாவது:

போட்டிகள் நிறைந்த இன்றைய சூழலில், மதிப்பெண்களுக்கும், தர வரிசைக்கும் மட்டுமே அனைவரும் முக்கியத்துவம் அளிக்கின்றனா். மதிப்பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பது உண்மையான கல்வி அல்ல. மாணவா்களின் திறமைகளை வளா்க்க வேண்டும். அவா்களிடம் இருக்கும் திறமைகளை ஊக்குவித்து பன்முக திறமை கொண்டவா்களாக மாணவா்களை மாற்ற வேண்டும்.

வகுப்பறைகளில் அமா்ந்து கல்வி கற்கும் முறை முக்கியம்தான். எனினும், வகுப்பறையில் மட்டுமே அனைத்து விதமான அறிவையும் நாம் பெற்றுவிட முடியாது. அதனால் இதற்கான தீா்வை கல்வியாளா்கள் கண்டறிய வேண்டும் என்று அவா் கூறினாா்.

ஆா்எஸ்எஸ் முகாம் தொடக்கம்:

நாகபுரியில் 25 நாள்கள் நடைபெறும் ஆா்எஸ்எஸ் சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. இந்த முகாமில் நாடு முழுவதிலும் இருந்து 850-க்கும் மேற்பட்ட ஆா்எஸ்எஸ் சேவகா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் கலந்து கொள்கின்றனா். அவா்கள் 40 முதல் 65 வயதுக்குள்பட்டவா்கள். தேச ஒற்றுமைக்காக அனைத்து சேவகா்களும் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com