டிசம்பருக்குள் மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்போம்: சஞ்சய் ரௌத்

மகாராஷ்டிரத்தில் டிசம்பர் மாதத்துக்குள் அசைக்க முடியாத ஸ்திரத்தன்மையுடன் கூடிய அரசை அமைப்போம் என சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்தார். 
டிசம்பருக்குள் மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்போம்: சஞ்சய் ரௌத்

மகாராஷ்டிரத்தில் டிசம்பர் மாதத்துக்குள் அசைக்க முடியாத ஸ்திரத்தன்மையுடன் கூடிய அரசை அமைப்போம் என சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்த சஞ்சய் ரௌத் கூறியதாவது:

மகாராஷ்டிரத்தில் விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் ஆகிய இருவரும் மாநிலத்தின் விவசாயிகள் மீது அதிக அக்கறைக் கொண்டவர்கள். எனவே அதன் அடிப்படையிலேயே பிரதமர் மோடியை சரத் பவார் சந்தித்துப் பேசவுள்ளார். பிரதமர் அனைவருக்குமானவர், எனவே அவரை யார் வேண்டுமானால், எப்போது வேண்டுமானால் சந்திக்கலாம்.

இங்கு நிலவும் விவசாயிகள் பிரச்னைகள் தொடர்பாக பிரதமரிடம் எடுத்துக்கூறுமாறு சிவசேனை தரப்பிலும் சரத் பவாரிடம் வலியுறுத்தப்பட்டது. கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மாநிலத்தின் அனைத்து எம்.பி.க்களும் பிரதமரை சந்தித்து விவசாயிகள் பிரச்னைக்காக முடிந்தவரை அதிக நிதியுதவி வழங்க வலியுறுத்த வேண்டும். உத்தவ் தாக்கரே கூட அனைத்து எம்.பி.க்களுடனும் தில்லி வந்து பிரதமர் மோடியை சந்திக்கக்கூடும்.  

மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க கடந்த 15 நாட்களாக இருந்து வந்த தடை இப்போது விலகியுள்ளது. இதை வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் அனைவரும் அறிவார்கள். அடுத்த 6 நாட்களில் அசைக்க முடியாத, நிலையான, ஸ்திரத்தன்மை கொண்ட அரசை அமைக்கும் பணிகள் நடைபெற்று முடியும். டிசம்பர் மாதத்துக்குள் அது நிறைவேறி ஆட்சியமைப்போம் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com