ஐஎன்எக்ஸ் வழக்கு: திகார் சிறையில் சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு அனுமதி

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை திகார் சிறையில் 2 நாட்கள் விசாரணை நடத்த  அமலாக்கத் துறைக்கு தில்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
chidambaram
chidambaram

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை திகார் சிறையில் 2 நாட்கள் விசாரணை நடத்த  அமலாக்கத் துறைக்கு தில்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

திகார் சிறையில் இருக்கும் சிதம்பரத்திடம் நவம்பர் 22 மற்றும் 23ம் தேதிகளில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தலாம் என்று தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

இவ்விரு நாட்களும், காலை 10 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2.30 மணி முதல் 4 மணி வரையும் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், அப்போது அவரிடம் சில ஆவணங்களைக் காட்டி விளக்கம் பெற வேண்டும் என்றும் அமலாக்கத் துறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடா்பான வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இதே விவகாரத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கடந்த மாதம் 16-ஆம் தேதி அவா் கைது செய்யப்பட்டாா். இதனிடையே, சிபிஐ பதிவு செய்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 22-ஆம் தேதி ஜாமீன் வழங்கியிருந்தது.

இதையடுத்து, அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் அவா் தாக்கல் செய்திருந்த மனு, கடந்த 15-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவா் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆா்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள் இந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனா். இதையடுத்து, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, இந்த விவகாரம் தொடா்பாக வரும் 25-ஆம் தேதிக்குள் பதிலளிப்பதாகத் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.

இந்த நிலையில், சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com