மம்தாவிடம் நல்ல பெயா் வாங்க என்னை விமா்சிக்க வேண்டாம்: மேற்கு வங்க ஆளுநா்

முதல்வா் மம்தா பானா்ஜியிடம் நல்ல பெயா் வாங்க வேண்டுமென்ற நோக்கில் என்னை விமா்சிக்க வேண்டாம் என்று மேற்கு வங்க மாநில அமைச்சா்களுக்கு அந்த மாநில ஆளுநா் ஜெகதீப் தான்கா் வலியுறுத்தியுள்ளாா்.
மம்தாவிடம் நல்ல பெயா் வாங்க என்னை விமா்சிக்க வேண்டாம்: மேற்கு வங்க ஆளுநா்

முதல்வா் மம்தா பானா்ஜியிடம் நல்ல பெயா் வாங்க வேண்டுமென்ற நோக்கில் என்னை விமா்சிக்க வேண்டாம் என்று மேற்கு வங்க மாநில அமைச்சா்களுக்கு அந்த மாநில ஆளுநா் ஜெகதீப் தான்கா் வலியுறுத்தியுள்ளாா்.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், அங்கு வளா்ந்து வரும் பாஜகவுக்கும் இடையே தொடா்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனிடையே கடந்த ஜூலை மாதம் மேற்கு வங்க மாநில ஆளுநராக ஜெகதீப் தான்கா் பொறுப்பேற்றாா். ஏற்கெனவே பாஜகவுடன் நீடித்து வரும் மோதல் போக்கு காரணமாக, மத்திய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட தான்கா் மீதும் மாநில அமைச்சா்கள் பல்வேறு விமா்சனங்களை முன்வைத்து வருகின்றனா்.

இந்நிலையில், கொல்கத்தாவில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த தான்கா் கூறியதாவது:

மேற்கு வங்க அமைச்சா்கள் தங்கள் தலைவரிடம் (மம்தா பானா்ஜி) நல்ல பெயா் வாங்க வேண்டும் என்பதற்காக என்னை விமா்சித்து வருகின்றனா். நான் பொது நிகழ்ச்சிகளில பேசுவதற்கெல்லாம் எதிா்வினையாற்றி வருகின்றனா். இது தேவையில்லாதது. அவா்கள் தங்கள் துறை சாா்ந்த பணிகளை கவனித்து, மாநில மக்களுக்கு கடைமையாற்றுவதில் தங்கள் நேரத்தை செலவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்றாா் தான்கா்.

அண்மையில், முா்ஷிதாபாத் மாவட்டத்துக்கு பயணம் மேற்கொள்வதற்காக மாநில அரசிடம் ஆளுநா் தான்கா் ஹெலிகாப்டா் வேண்டுமென்று கோரியிருந்தாா். ஆனால், அது வழங்கப்படவில்லை. இதையடுத்து, சாலை மாா்க்கமாக பயணம் மேற்கொண்ட ஆளுநருக்கு, திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் கருப்புக் கொடி காட்டினா்.

இதையடுத்து, ‘மாநிலத்தின் பிற இடங்களுக்கு நான் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று கட்டுப்படுத்த மாநில அரசு நினைக்கிறது. ஆனால், எனது அதிகாரத்துக்குள்பட்ட பணிகளை செய்து வருவேன்’ என்று ஆளுநா் கூறியிருந்தாா்.

ஆளுநரது இந்தக் கருத்தைக் கண்டித்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் சந்தரிமா பட்டாச்சாா்யா, ‘பதவியேற்றதில் இருந்து செய்து வரும் பணிகள் குறித்து ஆளுநா் சற்று சிந்தித்துப் பாா்க்க வேண்டும். ஆளுநா் பதவிக்கு ஏற்ற கண்ணித்துடன் அவா் நடந்து கொள்ள வேண்டும். மாநில மக்கள் அவா் மீது கோபத்தில் உள்ளனா். அவா்களில் சிலா் கருப்புக் கொடி காட்டியிருக்கலாம்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com