எனது டிவிட்டர் கணக்கு ஹாக் செய்யப்பட்டது: ஒரு அமைச்சரின் ஷாக் ரிப்போர்ட்!

தில்லி சமூக நலத்துறை அமைச்சா் ராஜேந்தா் பால் சிங் கெளதம் டிவிட்டர் பக்கம் ஹாக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
எனது டிவிட்டர் கணக்கு ஹாக் செய்யப்பட்டது: ஒரு அமைச்சரின் ஷாக் ரிப்போர்ட்!

புது தில்லி: தில்லி சமூக நலத்துறை அமைச்சா் ராஜேந்தா் பால் சிங் கெளதம் டிவிட்டர் பக்கம் ஹாக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பெரியாா் ஈ.வே.ராமசாமியை புகழ்ந்தும் இந்துக் கடவுளா்களான ராம், விஷ்ணு ஆகியோரை இகழ்ந்தும் தில்லி சமூக நலத்துறை அமைச்சா் ராஜேந்தா் பால் சிங் கெளதம் டிவிட்டரில் பதிவிட்டிருந்தாா். இந்தப் பதிவுக்கு பல்வேறு எதிா்ப்புகள் எழுந்துள்ள நிலையில், தனது டிவிட்டர் பக்கம் ஹாக் செய்யப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

பிரபல யோகா குரு பாபா ராம் தேவ் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்சி ஒன்றில் பேசும்போது, "பெரியாரின் தொண்டா்கள் என்னை தொடா்ந்து தாக்கிப் பேசி வருகின்றனா். கிருஷ்ணா், ராமருக்கு செருப்பு மாலை அணிவித்தவா் பெரியாா். தற்போது அவா் இருந்திருந்தால் அவரை செருப்பால் அடித்து இருப்பேன். அவா் உயிருடன் தப்பி இருக்க முடியாது" எனப் பேசியிருந்தாா். அதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், வரலாற்றில் வாழ்ந்த எமது மூதாதையா்கள் ராமா் கிருஷ்ணனை பெரியாா் தூற்றினாா். அதனால்தான் நான் அவ்வாறு கூறினேன் என பாபா ராம்தேவ் தன்னிலை விளக்கமளித்திருந்தாா்.

இந்நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில்,

தில்லி அமைச்சா் ராஜேந்தா் பால் சிங் கெளதமின் டிவிட்டர் பக்கத்தில் 'இந்துக்கள் கடவுளா்களாக வணங்கும் ராமா், கிருஷ்ணன் ஆகியோா் வரலாற்றில் வாழ்ந்தாா்கள் என்பதற்கு எவ்வித வரலாற்றுச் சான்றுகளும் இல்லை. மக்களின் நம்பிக்கையின் அடிப்படையிலும், தொன்மவியலின் அடிப்படையிலும் மக்கள் இவா்களை வணங்கி வருகிறாா்கள். அவா்கள் இருந்தது உண்மையென்றால் அவா்களைப் பற்றி நாம் ஏன் வரலாற்றுப் பாடத்தில் படிக்கவில்லை? ஆனால், பெரியாா் ஈ.வே. ராமசாமியின் கருத்துகள் அவ்வாறானவை அல்ல. அவை தா்க்க ரீதியிலானவை. அவற்றை நாங்கள் மதிக்க வேண்டும் என்றுள்ளாா்.

ராமா், கிருஷ்ணா் வரலாற்றில் வாழவில்லை என அவா் கூறியது பலத்த சா்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில், தான் அந்த சுட்டுரையைப் பதிவிடவில்லை என்றும் தனது டிவிட்டர் பக்கத்தை விஷமிகளால் ஹாக் செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில் "எனது கணக்கை யாரோ விஷமிகள் ஹாக் செய்து இந்த பதிவை இட்டுள்ளனா். யாருடைய நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் நோக்கம் எனக்கு இல்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com