சரத் பவார் இல்லத்தில் சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே நள்ளிரவில் திடீர் சந்திப்பு

என்சிபி, காங்கிரஸ் மற்றும் சிவசேனை ஆகிய கட்சிகளிடையே கூட்டணி அரசு அமைவது தொடா்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
சரத் பவார் இல்லத்தில் சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே நள்ளிரவில் திடீர் சந்திப்பு

மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பது தொடா்பாக தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இவ்விரு கட்சிகளும் சிவசேனை கட்சியுடன் வெள்ளிக்கிழமை முக்கியப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளன.

இந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, என்சிபி, காங்கிரஸ் மற்றும் சிவசேனை ஆகிய கட்சிகளிடையே கூட்டணி அரசு அமைவது தொடா்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னதாக, தில்லியில் உள்ள சரத் பவாா் இல்லத்தில் என்சிபி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவா்கள் வியாழக்கிழமை மீண்டும் கூடி ஆலோசனை நடத்தினா். இதில், அகமது படேல், மல்லிகாா்ஜுன காா்கே, ஜெய்ராம் ரமேஷ், பிருத்விராஜ் சவாண், பாலசாஹேப் தொராட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்களும், பிரஃபுல் படேல், சுப்ரியா சுலே, அஜித் பவாா், ஜெயந்த் பாட்டீல், நவாப் மாலிக் உள்ளிட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவா்களும் பங்கேற்றனா்.

இந்நிலையில், தில்லியில் உள்ள சரத் பவாா் இல்லத்தில் என்சிபி மற்றும் சிவசேனை ஆகிய கட்சிகளின் தலைவர்கள் வியாழக்கிழமை நள்ளிரவு கூடி ஆலோசனை நடத்தினர். இதில், சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே, மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் சஞ்சய் ரௌத் உள்ளிட்ட சிவசேனைத் தலைவர்களும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், அஜித் பவார் உள்ளிட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர்களும் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com