இங்கு மட்டும் ஒரு கிலோ வெங்காயம் ரூ.25 தானாம்! அதுவும் முதல்வரின் ஏற்பாடாம்!!

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அறிவுறுத்தலின்படி, வெள்ளியன்று உழவர் சந்தையில் வெங்காயத்துக்கு என தனி மையங்கள் அமைக்கப்பட்டன.
onion price
onion price

விஜயவாடா: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அறிவுறுத்தலின்படி, வெள்ளியன்று உழவர் சந்தையில் வெங்காயத்துக்கு என தனி மையங்கள் அமைக்கப்பட்டன.

அனைத்து மையங்களிலும் ஒரு கிலோ வெங்காயம் ரூ.25 மட்டும்தான். ஆனால் அதற்காக கிலோ கிலோவாக வாங்கிக் கொள்ளலாம் என்று நினைக்க வேண்டாம். இங்கே ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒரு கிலோ வெங்காயம் மட்டுமே விற்பனை செய்கிறார்கள்.

அதுவும் காலை 8 முதல் 10 மணி வரையும், மாலை 4 முதல் 6 மணி வேரை மட்டுமே இந்த மையங்கள் செயல்படும்.

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்திருக்கும் நிலையில், உழவர் சந்தைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யுமாறு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இங்கு வெங்காயத்தை வாங்கிச் செல்ல ஏராளமான பொதுமக்கள் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து வாங்கிச் செல்வதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com