பிரதமர் மோடியின் ஆட்சியில் தேசம் பாதுகாப்பாக உள்ளது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் தேசம் பாதுகாப்பாக உள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தார். 
பிரதமர் மோடியின் ஆட்சியில் தேசம் பாதுகாப்பாக உள்ளது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் தேசம் பாதுகாப்பாக உள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக உத்தரப் பிரதேசத்தில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்றபோது பேசியதாவது,

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் தேசம் பாதுகாப்பாக உள்ளது. திறமையான நல்ல முடிவுகளை எடுப்பதில் பிரதமர் மோடி தலைசிறந்த தலைவர் ஆவார். இது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டியதாகும். எனவே நமது நாடு பாதுகாப்பாக உள்ளது என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.

சர்வதேச அளவில் நமது நாட்டின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. முன்பெல்லாம் ஒரு நாடு தனது பொருளாதார நடைமுறையை அமெரிக்காவைப் போன்று கட்டமைக்க நினைக்கும். தற்போது அனைத்து நாடுகளும் இந்தியாவின் பொருளாதார முறை கட்டமைப்பை ஏற்படுத்த முன்வருகின்றன. உலகளவில் தற்போது அதிக முதலீடுகளை ஈர்க்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. 

அரசு அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே பாஜக அரசியலில் ஈடுபடவில்லை. நாடு மற்றும் நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காகவும், வளர்ச்சிக்ககாவும், பாதுகாப்புக்காகவும் தான் பாஜக அரசியலில் ஈடுபடுகிறது. நான் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது என்.ஆர்.சி பணிகள் தொடங்கி முடிக்கப்பட்டன. ஆனால், அப்போது அதில் ஏற்பட்டிருந்த சில சிக்கல்களை தீர்க்கும் பணிகள் தொடர்ந்தன. தற்போது அவை அனைத்தும் முடிவடைந்துவிட்டது.

எனவே நாடு முழுவதும் என்.ஆர்.சியை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அப்போது தான் நமது நாட்டின் குடிமக்களையும், இதர நாடுகளில் இருந்து இங்கு குடிபெயர்ந்தவர்களையும் சரியாக அடையாளம் காண முடியும். அதன்மூலம் நாட்டு மக்களுக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை சரியாக நடைமுறைப்படுத்த இயலும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com