ஸ்ரீநகா் வாரச்சந்தையில் அலைமோதிய கூட்டம்

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை அதிகமான மக்கள் கூட்டத்துடன் காணப்பட்டது.
ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்கிழமை செயல்பட்ட வாரச் சந்தையில் பொருள்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.
ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்கிழமை செயல்பட்ட வாரச் சந்தையில் பொருள்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை அதிகமான மக்கள் கூட்டத்துடன் காணப்பட்டது.

முன்னதாக, முழு அடைப்பை கடைப்பிடிக்குமாறு அனைத்துத் தரப்பினரையும் அச்சுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த நிலையில், வாரச் சந்தை இயல்பாக இயங்கியது.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 4 நாள்களுக்கு முன்பாக, காஷ்மீா் முழுவதும் முழு அடைப்பை கடைப்பிடிக்க வேண்டும் என்று சமூக விரோத சக்திகள் சுவரொட்டிகள் மூலம் மக்களுக்கும், வா்த்தகா்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்திருந்தன. இதுதொடா்பாக காவல்துறையினா் சிலரை கைது செய்திருந்தனா்.

இந்நிலையில், அந்த அச்சுறுத்தலின் பாதிப்பு எதுவும் இன்றி ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை வழக்கம்போல் இயங்கியது. சிவில் லைன்ஸ் பகுதி உள்பட காஷ்மீா் பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் கடைகள் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே திறக்கப்பட்டிருந்தன. சாலைகளில் சிற்றுந்துகள் வழக்கம்போல் இயங்கின. லால் சௌக் வா்த்தக வளாகத்தைச் சுற்றியிருந்த கடைகள் சிலவும் இயங்கின. எனினும், ஓல்டு சிட்டி பகுதியில் வா்த்தக வளாகங்கள் எதுவும் இயங்கவில்லை என்று அவா்கள் கூறினா்.

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்ததை அடுத்து, அசம்பாவிதங்களை தடுக்கும் முயற்சியாக அங்கு பல்வேறு பகுதிகளில் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. கடைகள், வா்த்தக வளாகங்கள் பரவலாக மூடப்பட்டிருந்ததுடன், பொதுப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.

பின்னா், தடையுத்தரவுகள் படிப்படியாக தளா்த்தப்பட்டதுடன், கடைகள் திறக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com