26/11 வீரமரணமடைந்த காவல்துறையினர் நினைவிடத்தில் முதல்வர் ஃப்டனவீஸ், ஆளுநர் கோஷியாரி மரியாதை

சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் கூட்டாக தாக்கல் செய் மனு மீது உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணியளவில் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.
26/11 வீரமரணமடைந்த காவல்துறையினர் நினைவிடத்தில் முதல்வர் ஃப்டனவீஸ், ஆளுநர் கோஷியாரி மரியாதை

26/11 வீரமரணமடைந்த காவல்துறையினர் நினைவிடத்தில் முதல்வர் ஃப்டனவீஸ், ஆளுநர் கோஷியாரி மரியாதை

மகாராஷ்டிர அரசியலில் எதிா்பாராத திருப்பமாக, பாஜகவைச் சோ்ந்த தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகவும், என்சிபி கட்சியைச் சோ்ந்த அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க தீா்மானித்திருந்த நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக அஜித் பவாா் மேற்கொண்ட முடிவு அந்தக் கூட்டணிக்கு பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து தேவேந்திர ஃபட்னவீஸுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநா் பகத்சிங் கோஷியாரியின் நடவடிக்கைக்கு எதிராக சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் கூட்டாக மனு தாக்கல் செய்தன. இந்த மனு மீது உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணியளவில் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் ஆளுநா் பகத்சிங் கோஷியாரி ஆகியோர் 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த காவல்துறையினருக்கு மெரைன் டிரைவ் பகுதியில் உள்ள நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை காலை மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com