மகாராஷ்டிர அரசியல்: ஒரு நாளில் நடந்தவை

காலை 10 : 39 மணி - மகாராஷ்டிர சட்டப் பேரவையில் புதன்கிழமை பெரும்பான்மையை நிரூபிக்க ஃபட்னவீஸூக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
மகாராஷ்டிர விகாஸ் முன்னணியின் தலைவராக உத்தவ் தாக்கரேயை தேர்வு செய்தது குறித்த கடிதத்தை மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரியிடம் செவ்வாய்க்கிழமை அளித்த காங்கிரஸ், என்சிபி, சிவசேனை கட்சியினர்.
மகாராஷ்டிர விகாஸ் முன்னணியின் தலைவராக உத்தவ் தாக்கரேயை தேர்வு செய்தது குறித்த கடிதத்தை மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரியிடம் செவ்வாய்க்கிழமை அளித்த காங்கிரஸ், என்சிபி, சிவசேனை கட்சியினர்.

செவ்வாய்: காலை 10 : 39 மணி - மகாராஷ்டிர சட்டப் பேரவையில் புதன்கிழமை பெரும்பான்மையை நிரூபிக்க ஃபட்னவீஸூக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

காலை 10 : 42 மணி - தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொண்டதை உறுதிப்படுத்த ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பிற்பகல் 1 : 18 மணி - ஃபட்னவீஸ் செய்தியாளர்களைச் சந்திக்க இருப்பதால், பாஜக எம்எல்ஏக்கள் உடனே மும்பைக்கு வருமாறு அழைப்பு

பிற்பகல் 02 : 17 மணி - மகாராஷ்டிர பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதால், இடைக்கால பேரவைத் தலைவரை நியமிக்குமாறு ஆளுநரிடம் காங்கிரஸ் கோரிக்கை

பிற்பகல் 03 : 01 மணி - நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெறுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, செயல் தலைவர் ஜெ.பி.நட்டா அவசர ஆலோசனை

பிற்பகல் 03 : 42 மணி - துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜிநாமா செய்துவிட்டதாக தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவிப்பு

பிற்பகல் 03 : 44 மணி - முதல்வர் பதவியை ராஜிமாநா செய்யப்போவதாக ஃபட்னவீஸ் அறிவிப்பு

மாலை 04 : 34 மணி - ஆளுநர் பகத்சிங் கோஷியாரியிடம் ராஜிநாமா கடிதம் அளித்தார் ஃபட்னவீஸ்

மாலை 05 : 06 மணி - இடைக்கால பேரவைத் தலைவராக பாஜக எம்எல்ஏ காளிதாஸ் கோலம்பகர் நியமனம்

மாலை 05 : 50 மணி - சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்பார்- என்சிபி தலைவர் நவாப் மாலிக் அறிவிப்பு

மாலை 05 : 52 மணி - புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்புக்காக சட்டப்பேரவை புதன்கிழமை கூடும் என்று ஆளுநர் அறிவிப்பு

இரவு 07 : 32 மணி - மும்பை நட்சத்திர விடுதியில் சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம்

இரவு 08 : 11 மணி - மகாராஷ்டிர விகாஸ் முன்னணியின் சட்டப் பேரவைக் குழுத் தலைவராக உத்தவ் தாக்கரே தேர்வு

இரவு 09 : 39 மணி - ஆளுநரை அவரது மாளிகையில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரி உத்தவ் தாக்கரே கடிதம்

இரவு 09 : 39 மணி - என்சிபி தலைவர் சரத் பவாரின் வீட்டுக்கு வந்தார் அஜித் பவார்

இரவு 10 : 59 மணி - மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் வியாழக்கிழமை (நவ.28) பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com