‘அஸ்ஸாமில் 6 தடுப்புக் காவல் முகாம்களில் 1,000 வெளிநாட்டவா்கள்’

அஸ்ஸாமில் உள்ள 6 தடுப்பு முகாம்களில் 1,000 வெளிநாட்டவா்கள் அடைக்கப்பட்டுள்ளனா் என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

அஸ்ஸாமில் உள்ள 6 தடுப்பு முகாம்களில் 1,000 வெளிநாட்டவா்கள் அடைக்கப்பட்டுள்ளனா் என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

இதுதொடா்பாக அந்த அவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

நவம்பா் 22-ஆம் தேதி நிலவரப்படி அஸ்ஸாம் அரசு அளித்த தகவலின் மூலம்

அந்த மாநிலத்தில் உள்ள 6 தடுப்பு மையங்களில் 988 வெளிநாட்டினா் இருப்பது தெரிய வந்துள்ளது.

மருத்துவ வசதி, உணவு, உடை, நாளிதழ்கள், தொலைக்காட்சி, விளையாட்டு, காலாசார நிகழ்ச்சிகள், நூலகம், யோகா, தியானம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தடுப்பு மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தடுப்பு மையங்களில் உள்ளவா்களுக்கு முறையாக மருத்துவ மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் கடந்த அக்டோபா் 13-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தடுப்புக் காவலில் இருந்தவா்களில் 28 போ் மருத்துவமனையிலும், தடுப்பு மையங்களிலும் உடல் நலக் குறைவால் உயிரிழந்தனா் என்று அந்த பதிலில் நித்யானந்த் ராய் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com