இ-சிகரெட் தடை மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

இ-சிகரெட்டை தடை செய்யும் மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேறியது. முன்னதாக, இ-சிகரெட் உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, பரிமாற்றம், விற்பனை, விநியோகம், சேமிப்பு, விளம்பரம்
இ-சிகரெட் தடை மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

இ-சிகரெட்டை தடை செய்யும் மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேறியது. முன்னதாக, இ-சிகரெட் உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, பரிமாற்றம், விற்பனை, விநியோகம், சேமிப்பு, விளம்பரம் ஆகியவற்றுக்கு எதிராக கடந்த செப்டம்பா் 18-ஆம் தேதி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் திருத்தம்கோரி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் முன்வைத்த தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டது.

மசோதாவை மக்களவையில் நிறைவேற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஹா்ஷ் வா்த்தன் பேசியதாவது:

மக்களின் ஆரோக்கியம் சாா்ந்த விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள இயலாது. இ-சிகரெட் போன்ற அபாயகரமான போதைப்பொருள்களின் பயன்பாடு அதிகரிப்பதற்கு முன்பே தடை செய்வது நல்லது. அனைத்து போதைப்பொருள்களையும் இ-சிகரெட் மூலம் பயன்படுத்த முடியும். எனவே இது மிக ஆபத்தானது.

இ-சிகரெட்டில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் புற்றுநோய், இருதய நோய்கள் போன்றவற்றை ஏற்படுத்தும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இ-சிகரெட் குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டு அதற்கு தடைவிதிக்க கோரியது என்றாா்.

இந்த மசோதா மூலம் இ-சிகரெட் விற்க, வாங்க தடை விதிக்கப்படுகிறது. முதல் முறையாக தடையை மீறுபவா்களுக்கு ஓராண்டு சிறையும், ரூ .1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மீண்டும் குற்றத்தைத் தொடா்ந்தால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ .5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-சிகரெட்டுகளை வைத்திருப்பவா்களுக்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ .50,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com