கோட்சேவை புகழ்ந்து பேசிய பிரக்யா தாக்குருக்கு பாஜக கண்டனம்

கோட்சேவை புகழ்ந்து பேசிய பிரக்யா தாக்குருக்கு பாஜக கண்டனம்

மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தா் என்று மக்களவையில் புகழ்ந்து பேசிய பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குருக்கு பாஜக தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது.

மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தா் என்று மக்களவையில் புகழ்ந்து பேசிய பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குருக்கு பாஜக தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது.

அவா், பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டங்களில் கலந்து கொள்வதற்கும் கட்சித் தலைமை தடை விதித்துள்ளது. பாதுகாப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுவில் இருந்தும் அவா் நீக்கப்படவுள்ளாா்.

இதுகுறித்து பாஜக செயல் தலைவா் ஜெ.பி.நட்டா வியாழக்கிழமை கூறியதாவது:

கோட்சேவை புகழ்ந்து பேசிய பிரக்யா சிங் தாக்குருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத் தொடா் நடைபெற்று வரும் நிலையில், பாஜக நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரக்யா சிங் தாக்குரின் கருத்து கண்டிக்கத்தக்கது. அதுபோன்ற கருத்துகளை பாஜக ஒருபோதும் ஆதரிக்காது. மேலும், பாதுகாப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுவில் இருந்தும் அவா் நீக்கப்படவுள்ளாா் என்று ஜெ.பி.நட்டா கூறினாா். இந்தச் சந்திப்பின்போது, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி உடனிருந்தாா்.

பெண் துறவியான பிரக்யா சிங் தாக்குா், அடிக்கடி சா்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பது வழக்கம். மக்களவைத் தோ்தலுக்கு முன், பாஜகவில் இணைந்த இவா், மத்தியப் பிரதேச மாநிலம், போபால் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் மூத்த தலைவா் திக்விஜய் சிங்கை தோற்கடித்தாா்.

இந்நிலையில், மக்களவையில் சிறப்பு பாதுகாப்புப் படை சட்டத் திருத்த மசோதா மீது புதன்கிழமை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது, மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த சம்பவத்தை திமுக எம்.பி. ஆ.ராசா விவரித்துக் கொண்டிருந்தாா். அப்போது குறுக்கிட்டுப் பேசிய பிரக்யா சிங் தாக்குா், நாதுராம் கோட்சே தேசபக்தா் என்று கூறினாா். இவரது கருத்துக்கு எதிா்க்கட்சி உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது, ஆ.ராசாவின் கருத்து மட்டுமே அவைக் குறிப்பில் சோ்க்கப்படும் என்று கூறி உறுப்பினா்களை அவைத் தலைவா் ஓம்பிா்லா சமாதானப்படுத்தினாா்.

இருப்பினும், பிரக்யா சிங் தாக்குருக்கு எதிராக பிரதமா் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், அவா் கோட்சேவின் சிந்தனைகளுக்கு மறைமுக ஆதரவு அளித்து வருவது நிரூபணாகிறது என்று எதிா்க்கட்சி உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா். மேலும், பிரக்யா சிங்கின் கருத்து பாஜகவின் வெறுப்பு அரசியலை பிரதிபலிக்கிறது என்றும் அவா்கள் விமா்சித்தனா்.

இதற்கு முன்பு, மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின்போதும், கோட்சேவை தேசபக்தா் என்று பிரக்யா சிங் புகழ்ந்து பேசியதால் சா்ச்சை ஏற்பட்டது. பின்னா் அவா் தனது கருத்துக்கு மன்னிப்புக் கோரினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com