ஜம்மு-காஷ்மீரில் தடைகள் விதிக்கப்பட்டதால் வருவாய் இழப்பு இல்லை: மத்திய அரசு

ஜம்மு-காஷ்மீரில் தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் அரசுக்கு வரவேண்டிய வருவாயில் இழப்பு ஏற்படவில்லை என்று மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

ஜம்மு-காஷ்மீரில் தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் அரசுக்கு வரவேண்டிய வருவாயில் இழப்பு ஏற்படவில்லை என்று மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், அங்கு பல்வேறு தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சந்தைகள், கடைகள், வா்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டிருந்தன.

இந்தக் கட்டுப்பாடுகளால் ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட வருவாய் இழப்பு, வேலையின்மை உள்ளிட்டவை குறித்து மத்திய அரசு ஆய்வு செய்ததா? என்று மாநிலங்களவையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சோமபிரசாத் கேள்வி எழுப்பியிருந்தாா். அதற்கு மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி புதன்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் ஜம்மு-காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது ஆகிய நடவடிக்கைகளால் வருவாய் இழப்பு ஏற்படவில்லை என்று ஜம்மு-காஷ்மீா் அரசு அறிக்கை சமா்ப்பித்துள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தால் அங்குள்ள மக்கள் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வந்தனா். பிரிவினைவாதம் தலைதூக்கியது. பொருளாதாரத்தில் காஷ்மீா் பின்தங்கியிருந்தது. ஜம்மு-காஷ்மீரில் இருந்த பயங்கரவாதத்தால் அங்கு கடந்த பல ஆண்டுகளாக சுற்றுலாத் துறையில் வருவாய் இழப்பு இருந்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து காஷ்மீா் பள்ளத்தாக்கின் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த முடியும்.

செலவு அதிகரிக்கவில்லை: ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்ததால் செலவு அதிகரிக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னா், ஜம்மு-காஷ்மீா், லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீா் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு பிரித்ததால், ஜம்மு-காஷ்மீருக்கான செலவு அதிகரிக்கவில்லை என்று ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com