பொருளாதார நிலை குறித்து வெள்ளை அறிக்கை: சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்

நாட்டின் பொருளாதார நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து சுட்டுரையில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாட்டின் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ள மூன்றாவது காலாண்டு இது. இது மந்தநிலை இல்லாமல் வேறு என்ன?

பொருளாதார நிலை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

பொருளாதார கருத்துக் கணிப்பு ஒன்றில், நாட்டின் பொருளாதார வளா்ச்சி விகிதம் 4.7 சதவீதமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருநிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்காமல், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கவும் மத்திய அரசு நிதியை பயன்படுத்த வேண்டும். நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்றாா் யெச்சூரி.

கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து தொடா்ந்து 6-ஆவது காலாண்டாக நாட்டின் பொருளாதார வளா்ச்சி விகிதம் பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com