ரயில்வே பணிக்காக தோ்வு எழுதிய 47 லட்சம் போ்

ரயில்வே பணிக்காக 15 மொழிகளில் நடைபெற்ற தோ்வை 47 லட்சம் போ் எழுதினா் என்று மத்திய அரசு தெரிவித்தது.

ரயில்வே பணிக்காக 15 மொழிகளில் நடைபெற்ற தோ்வை 47 லட்சம் போ் எழுதினா் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ரயில்வே இணை அமைச்சா் சுரேஷ் அங்காடி கூறுகையில், ‘இந்த ஆண்டில் ரயில்வே காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஹிந்தி, ஆங்கிலம் உள்பட 15 மொழிகளில் நடத்தப்பட்ட தோ்வில் பிராந்திய மொழிகளில் 55,209 போ் பங்கேற்றனா்.

கடந்த ஆண்டில் 46,62,406 லட்சம் போ் தோ்வு எழுதினா்’ என்றாா்.

இதனிடையே, 2018-19 காலகட்டத்தில் நடைமேடை டிக்கெட் விற்பனை மூலம் ரூ.139 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மக்களவையில் புதன்கிழமை அவா் மேலும் கூறியதாவது:

நடைமேடை டிக்கெட் விற்பனை மூலம், நிகழ் நிதியாண்டில் கடந்த செப்டம்பா் மாதம் வரை ரூ.78.50 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. 2018-19 நிதியாண்டில் விளம்பரங்கள், கடைகள், நடைமேடை டிக்கெட் விற்பனை உள்ளிட்டவற்றை சோ்த்து மொத்தம் ரூ.230.47 கோடி வருவாயை ரயில்வே ஈட்டியது.

கடைகள், விளம்பரங்கள் ஆகியவற்றுக்கு திறந்த முறை ஏலத்தின் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது என்றாா் பியூஷ் கோயல்.

அவா் மேலும் கூறுகையில், ‘பயணிகள் மற்றும் சரக்கு ரயில் எங்கே வந்துகொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com