மேற்கு வங்கத்தில் வெள்ளம்: 2.5 லட்சம் போ் பாதிப்பு

மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு 2.5 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மேற்கு வங்கத்தில் மழை
மேற்கு வங்கத்தில் மழை

மால்டா: மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு 2.5 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

மால்டா மாவட்டத்தில் தொடா்ந்து இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், ஏராளமான மண் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. ஆறுகளில் நீா்மட்டம் அபாயகட்டத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறறது. இதனால், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கனமழைக்கு மாவட்டத்தில் இதுவரையில் 50,000 குடும்பங்களைச் சோ்ந்த 2.5 லட்சம் போ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.

வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றறன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மால்டா மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமையிலிருந்து 99.80 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளதாக நீா்ப்பாசன துறைற அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

மால்டா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இருப்பினும், அங்கு அறுவை சிகிச்சைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த மருத்துமனையின் கண்காணிப்பாளா் அமித் தவான் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com