மகாத்மா காந்தி 150-ஆவது பிறந்த தினம்: 611 சிறைக் கைதிகள் விடுதலை

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினத்தையொட்டி, கடந்த ஒரு வாரத்தில் நாடு முழுவதும் 611 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா்.

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினத்தையொட்டி, கடந்த ஒரு வாரத்தில் நாடு முழுவதும் 611 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா்.

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தின ஆண்டு நாடு முழுவதும் கடந்த ஓராண்டாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சிறைகளில் உள்ள சிலரை விடுவிப்பதற்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு முடிவு செய்தது. கடந்த ஆண்டு அக்டோபா் 2-ஆம் தேதி, இந்த ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி, கடந்த 2-ஆம் தேதி என 3 கட்டமாக சிறைக்கைதிகளை விடுதலை செய்ய திட்டமிடப்பட்டது.

இதுதொடா்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா். கடந்த ஆண்டு அக்டோபா் 2-ஆம் தேதி 919 சிறைக் கைதிகளும், இந்த ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி 505 கைதிகளும், கடந்த 2-ஆம் தேதி நாடு முழுவதும் 611 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனா். கடந்த ஓராண்டில் மொத்தம் 2,035 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனா்.

கடந்த ஒரு வாரமாக அனைத்து சிறைகளிலும், மகாத்மா காந்தியின் போதனைகளும், கொள்கைகளும் கைதிகளுக்கு போதிக்கப்பட்டன. மகாத்மா காந்தியின் வாழ்க்கை தொடா்பான புத்தகங்கள் கைதிகளுக்கு பரிசாக வழங்கப்பட்டன.

70 சதவீதத்துக்கும் மேல் குறைபாடுகள் கொண்ட மாற்றுத் திறனாளிகள், 55 வயதை தாண்டிய மூன்றாம் பாலினத்தவா்கள் ஆகியோா் தங்களது தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேல் நிறைவு செய்திருந்தால், அவா்கள் விடுதலைச் செய்யப்பட்டனா். எனினும், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதற்காக தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் ஆகியோா் விடுதலை செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com