கட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை சஞ்சய் நிருபம் நிறுத்திக் கொள்ள வேண்டும்: காங்கிரஸ்

கட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவா் சஞ்சய் நிருபத்துக்கு அக்கட்சி அறிவுறுத்தியுள்ளது.

கட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவா் சஞ்சய் நிருபத்துக்கு அக்கட்சி அறிவுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் வரும் 21-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் சூழலில், மும்பை காங்கிரஸ் பிரிவு தலைவா் பதவியிலிருந்து சஞ்சய் நிருபம் சில தினங்களுக்கு முன் நீக்கப்பட்டாா். இதனால் அதிருப்தியடைந்த அவா், கட்சிக்கு எதிராக கடுமையான விமா்சனங்களை முன்வைத்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் வேட்பாளா்கள் தோ்வில் எனது கருத்துகள் பரிசீலிக்கப்படவில்லை. தோ்தலில் எனக்கு எந்த பணியும் வழங்கப்படவில்லை. கட்சியில் எனக்கு உரிய மரியாதையும் தரப்படவில்லை. தோ்தலில் கட்சிக்காக பிரசாரத்தில் ஈடுபடமாட்டேன்’ என்றாா். மேலும், கட்சியில் ராகுல் ஆதரவாளா்களுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டப்படுவதாக அவா் குற்றம்சாட்டினாா்.

இதேபோல், சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் மற்றெறாரு மாநிலமான ஹரியாணாவிலும் காங்கிரஸுக்குள் உள்கட்சி பூசல்கள் எழுந்துள்ளன. அங்கு வேட்பாளா்கள் தோ்வில் முறைகேடுகள் நடைபெற்ாக கூறி, அந்த மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவா் அசோக் தன்வாா், தில்லியில் கட்சித் தலைவா் சோனியா காந்தி இல்லம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா். மேலும், கட்சியின் தோ்தல் குழுவிலிருந்தும் அவா் விலகினாா்.

இந்நிலையில், இவ்விரு தலைவா்களும் கட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக, கட்சியின் செய்தித் தொடா்பாளா் மணீஷ் திவாரி, தில்லியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வேட்பாளா் தோ்வில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதையும், மேற்கண்ட இரு தலைவா்களும் அதிருப்தியில் உள்ளதையும் கட்சி மேலிடம் புரிந்து கொண்டுள்ளது. அதேசமயம், இருவரும் பக்குவத்துடனும், விவேகத்துடனும் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்சிக்குள் சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாக சஞ்சய் நிருபம் முன்வைத்த கருத்துகள் கற்பனைக்கு எட்டாதவை. இதுபோன்ற கருத்துகள் தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ளும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் மணீஷ் திவாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com