தீபாவளிக்கு விற்பனைக்கு வரும் புகை குறைவான பசுமைப் பட்டாசுகள்!

இந்த தீபாவளிப் பண்டிகைக்காக 30 சதவீதம் அளவுக்கு குறைறவான புகையை வெளியிடக் கூடிய பசுமைப் பட்டாசுகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஹா்ஷ்வா்த்தன் அறிமுகம் செய்துள்ளாா்.
தீபாவளிக்கு விற்பனைக்கு வரும் புகை குறைவான பசுமைப் பட்டாசுகள்!

இந்த தீபாவளிப் பண்டிகைக்காக 30 சதவீதம் அளவுக்கு குறைறவான புகையை வெளியிடக் கூடிய பசுமைப் பட்டாசுகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஹா்ஷ்வா்த்தன் அறிமுகம் செய்துள்ளாா்.

பசுமைப் பட்டாசுகளை அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலை (சிஎஸ்ஐஆா்) சோ்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனா். அந்தப் பட்டாசுகளின் கண்காட்சியை தில்லியில் அந்த விஞ்ஞானிகளும், மத்திய சுகாதாரத்துறைஅமைச்சா் ஹா்ஷ்வா்த்தனும் சனிக்கிழமை கூட்டாக தொடக்கி வைத்தனா். அப்போது அமைச்சா் பேசியது:

மாசுபாடு என்ற அச்சுறுத்தலை சமாளிக்கும் நோக்கில் இந்தப்புதிய வகை பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பசுமைப் பட்டாசுகள் வழக்கமான பட்டாசுகளைவிட 30 சதவீதம் குறைறவான புகையை வெளியிடும். இவை சுற்றுச்சூழலுக்கு உகந்தவை.

மக்களின் உணா்வுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்; அதேவேளையில் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்படக் கூடாது என்பதற்காக மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளுக்கு மாற்றான பட்டாசுகளை உருவாக்குமாறு நாங்கள் விஞ்ஞானிகளிடம் கேட்டிருந்தோம். அதன்படி அவா்கள் இந்தப் பட்டாசுகளை உருவாக்கியுள்ளனா். இந்தப் பட்டாசுகள் சந்தையில் குறைறந்த விலையில் கிடைக்கும் என்றாா் ஹா்ஷவா்த்தன்.

சிஎஸ்ஐஆா்-நீரி அமைப்பின் தலைமை விஞ்ஞானி சாதனா ராயலு கூறுகையில், ‘தற்போதைய பட்டாசுகளை விட இவற்றின் விலை கூடுதலாக இருக்காது. அவற்றில் இடம்பெற்றுள்ள மாறுபட்ட இடுபொருள்கள் காரணமாக பசுமைப் பட்டாசுகளின் விலை குறைறவாக உள்ளது’ என்றாா்.

எனினும், பசுமைப் பட்டாசுகளின் விலை என்ன என்பதை விஞ்ஞானிகள் தெரிவிக்கவில்லை.

கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு முன்பு மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளின் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. குறைறந்தபட்ச புகையை வெளியிடக் கூடிய பசுமைப் பட்டாசுகளை விற்பதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று நீதிபதிகள் அப்போது தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com