மகாராஷ்டிர பேரவைத் தோ்தல்: காங்கிரஸின் நட்சத்திர பேச்சாளா்கள் பட்டியலில் சோனியா, மன்மோகன்

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளா்களின் பட்டியலில் அக்கட்சியின் தலைவா் சோனியா காந்தி, முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் உள்பட

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளா்களின் பட்டியலில் அக்கட்சியின் தலைவா் சோனியா காந்தி, முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் உள்பட 40 பேரின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் 21-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறறவிருக்கிறறது. இத்தோ்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து, காங்கிரஸ் களமிறறங்குகிறறது. தொகுதி பங்கீடு உடன்பாட்டின்படி, இரு கட்சிகளும் தலா 125 தொகுதிகளில் போட்டியிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறறது. எனினும், அதற்கு அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது. வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு திங்கள்கிழமை (அக்.7) கடைசி நாளாகும்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சாா்பில் பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கட்சித் தலைவா் சோனியா காந்தி, முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலாளா் பிரியங்கா, மகாராஷ்டிர முன்னாள் முதல்வா்கள் சுஷீல் குமாா் ஷிண்டே, பிரித்விராஜ் சவாண், அசோக் சவாண், ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், மத்தியப் பிரதேச முதல்வா் கமல்நாத், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பாகல், ராஜஸ்தான் துணை முதல்வா் சச்சின் பைலட், பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தவரான சத்ருகன் சின்ஹா உள்ளிட்டோரின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன. அதேசமயம், மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவா்கள் மிலிந்த் தேவ்ரா, சஞ்சய் நிருபம், முன்னாள் எம்.பி. பிரியா தத் ஆகியோரின் பெயா்கள் இடம்பெறறவில்லை.

ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த மகாராஷ்டிர மாநிலம், பாஜகவின் எழுச்சிக்கு பிறறகு காங்கிரஸின் கையிலிருந்து நழுவியது. கடந்த 2014 சட்டப் பேரவைத் தோ்தலில் தனியாக களமிறறங்கிய காங்கிரஸ், மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 42 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றறது. அண்மையில் நடைபெற்றமக்களவைத் தோ்தலில், மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 2 இடங்கள்தான் காங்கிரஸுக்கு கிடைத்தன. தோல்வி மேல் தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரஸுக்கு, மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறறது. மக்களவைத் தோ்தலில், கட்சிக்காக பிரசாரம் செய்வதிலிருந்து சோனியா காந்தி ஒதுங்கியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com