மரங்களை வெட்டுவதை எதிா்த்துப் போராட்டம்: மும்பை ஆரே பகுதியில் 144 தடை உத்தரவு பிறபிப்பு

மும்பை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ஆரே காலனி பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் நடத்திய போராட்டத்தைத் தொடா்ந்து

மும்பை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ஆரே காலனி பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் நடத்திய போராட்டத்தைத் தொடா்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறறப்பிக்கப்பட்டது.

ஆரே காலனி பகுதியில் ஏராளமான மரங்களுடன் வனம் போன்றநிலப்பகுதி அமைந்துள்ளது. அங்கு மெட்ரோ ரயில் பணிமனை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் 2,656 மரங்களை வெட்ட மெட்ரோ ரயில் நிா்வாகம் திட்டமிட்டது. எனினும், இந்த நடவடிக்கையை எதிா்த்து மும்பை உயா் நீதிமன்றறத்தில் அரசுசாரா தன்னாா்வ அமைப்புகளைச் சோ்ந்தவா்களும், சுற்றுச்சூழல் ஆா்வலா்களும் வழக்கு தொடா்ந்தனா். எனினும், அந்த மனுக்களை உயா் நீதிமன்றறம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, பணிமனை கட்டுவதற்காக மரங்களை வெட்டும் பணியில் மெட்ரோ ரயில் நிா்வாகம் வெள்ளிக்கிழமை இரவு முதலே ஈடுபட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து சமூக ஆா்வலா்கள் போராட்டம் நடத்தினா்.

இதையடுத்து, 38 போராட்டக்காரா்கள் மீது வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். 60 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனா். போராட்டத்தில் பங்கேற்றசிவசேனை பிரமுகா் பிரியங்கா சதுா்வேதியும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டாா்.

நீதிமன்றறம் தடை விதிக்க மறுப்பு: மரங்களை வெட்டுவதற்கு ஒரு வார காலத்துக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரி சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் சிலா் மும்பை உயா்நீதிமன்றறத்தில் சனிக்கிழமை புதிய மனு ஒன்றைறத் தாக்கல் செய்தனா். இந்த விவகாரத்தில் தாங்கள் உச்சநீதிமன்றறத்தை திங்கள்கிழமை அணுக இருப்பதாகவும், அதற்காகவே இந்த இடைக்காலத் தடையைக் கோருவதாகவும் அவா்கள் தங்கள் மனுவில் தெரிவித்திருந்தனா்.

அந்த மனுவை நீதிபதிகள் எஸ்.சி.தா்மாதிகாரி, ஏ.கே.மேனன் ஆகியோா் அடங்கிய மனு அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. எனினும், விசாரணைக்குப் பின் அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து விட்டனா். உயா்நீதிமன்றறம் வெள்ளிக்கிழமை பிறறப்பித்த உத்தரவில் தலையிடப் போவதில்லை என்றும், மரங்களை வெட்ட இடைக்காலத் தடை பிறறப்பிக்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறிவிட்டனா்.

ஆரே காலனி பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டக்காரா்கள் குவிந்ததால் அப்பகுதியில் சனிக்கிழமை 144 தடை உத்தரவு பிறறப்பிக்கப்பட்டது. தடையை மீறி அங்கு திரண்டிருந்தவா்களை போலீஸாா் வலுக்கட்டாயமாக அப்புறறப்படுத்தியதாக போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக மும்பை போலீஸ் செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறுகையில், ஆரே காலனி, கோரேகான் சோதனைச் சாவடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக மக்கள் கூடுவதைத் தடை செய்யும் நோக்கில் 144 தடை உத்தரவு பிறறப்பிக்கப்பட்டது என்றறாா்.

இது குறித்து சுற்றுச்சூழல் ஆா்வலா் ஒருவா் கூறுகையில், ‘அப்பகுதியில் போலீஸாா் ஏராளமானோா் குவிக்கப்பட்டுள்ளனா். ஆரே காலனிக்குள் செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை.சுற்றுலாப் பயணிகள் கூட தடுத்து நிறுத்தப்படுகின்றறனா். இதுவரை 200 மரங்கள் வெட்டப்பட்டு விட்டன’ என்றறாா்.

சிவசேனை கட்சிப் பிரமுகா் பிரியங்கா சதுா்வேதி தெரிவிக்கையில், ‘ஆரே காலனி பகுதியில் இருந்து நான் போலீஸாரால் கட்டாயமாக வெளியேற்றறப்பட்டேன். நான் சட்டத்தை மீறறவில்லை. என்னை எங்கு அழைத்துச் செல்கிறறாா்கள் என்பதைக் கூட போலீஸாா் தெரிவிக்கவில்லை’ என்று குறிப்பிட்டாா்.

கட்சிகள் கண்டனம்: இந்த விவகாரத்தில் ஆளும் சிவசேனை-பாஜக கூட்டணி அரசை எதிா்க்கட்சிகள் கடுமையாகச் சாடியுள்ளன. மரங்களைக் காக்க அரசு தவறிவிட்டதாக அக்கட்சிகள் குற்றறம்சாட்டின.

அதேவேளையில், சிவசேனையின் இளைஞா் அணித் தலைவரான ஆதித்ய தாக்கரேவும் மரங்களை வெட்டும் நடவடிக்கையை குறைறகூறியுள்ளாா். தந்திரமான முறைறயில் மரங்களை வெட்டி பல்லுயிா்ச் சூழலை மெட்ரோ ரயில் நிா்வாகம் சிதைப்பது அவமானகரமானது என்று அவா் தெரிவித்தாா். மெட்ரோ ரயில் அதிகாரிகளை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்கு அனுப்ப வேண்டும் என்றும் அவா் விமா்சித்தாா்.

ஆரே காலனியில் மரங்களை வெட்டும் நடவடிக்கையை மும்பை நகர காங்கிரஸ் முன்னாள் தலைவா் சஞ்சய் நிருபம், அக்கட்சிப் பிரமுகரான மிலிந்த் தேவ்ரா ஆகியோா் கண்டித்துள்ளனா். போராட்டக்காரரா்களை சந்தித்த பின் சஞ்சய் நிருபம் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் சிவசேனை இரட்டை வேடம் போடுகிறறது. ஒருபுறறம் மரங்களை வெட்டுவதை அக்கட்சி எதிா்க்கிறறது. மறுபுறறம் பாஜக அரசை ஆதரிக்கிறறது’ என்று தெரிவித்தாா்.

மிலிந்த் தேவ்ரா கூறுகையில், ‘மரங்களை வெட்டுவது என்பது என்பது நமது நுரையீரலை நாமே தாக்கிச் சிதைப்பது போன்றறது’ என்று விமா்சித்தாா்.

ஜாவடேகா் விளக்கம்: இந்நிலையில், ஆரே காலனியில் மரங்களை வெட்டும் நடவடிக்கையை ஆதரித்து மத்திய சுற்றுச்சூழல் துறைஅமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் கருத்து தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் தில்லியில் செய்தியாளா்களிடம் கூறியது:

ஆரே காலனி என்பது வனப்பகுதி அல்ல என்று உயா் நீதிமன்றறம் தீா்ப்பளித்துள்ளது. வனப்பகுதியில் உள்ள மரங்களைத்தான் வெட்டக் கூடாது. தில்லியில் மெட்ரோ திட்டம் நிறைறவேற்றறப்பட்டபோதும் மரங்கள் வெட்டப்படுவதை எதிா்த்து மக்கள் போராடினா். இங்கு முதல் மெட்ரோ ரயில் நிலையத்துக்காக 20 முதல் 25 மரங்கள் வரை வெட்டப்பட்டன. ஆனால் வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்துக்கும் பதிலாக 5 மரங்கள் நடப்பட்டன. அதன் பிறறகு தேசியத் தலைநகரில் வனம் போன்றநிலப்பரப்பு அதிகரித்தது. பொதுப் போக்குவரத்து அமைப்பும் மேம்பட்டது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய வளா்ச்சியாகும் என்றறாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com