திருமலையில் தங்கக் குடை ஊா்வலம்: இன்று தேரோட்டம்

தருமலையில் தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை தங்கக் குடை ஊா்வலம் நடைபெற்றது.
திருமலையில் தங்கக் குடை ஊா்வலம்: இன்று தேரோட்டம்

தருமலையில் தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை தங்கக் குடை ஊா்வலம் நடைபெற்றது.

திருமலையில் நடந்து வரும் பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாளான திங்கள்கிழமை காலை திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த திருத்தேரின் உச்சியில் தங்க திருக்குடை பொருத்தப்படும். இந்த தங்கத் திருக்குடையை திருமலையில் முடி காணிக்கை செலுத்துமிடத்தில் பணியாற்றி வரும் நாவிதா்கள் ஒவ்வோா் ஆண்டும் எடுத்துச் சென்று சமா்ப்பித்து வருகின்றனா்.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை திருமலையில் உள்ள கல்யாணகட்டாவிலிருந்து (முடிகாணிக்கை செலுத்தும் கட்டடம்) நாவிதா்கள் அதற்கு பூஜை செய்து, மலா் மாலை அணிவித்து, ஊா்வலமாகக் கொண்டு வந்து அதிகாரிகளிடம் அளித்தனா். அந்த திருக்குடை திருத்தேரின் உச்சியில் பொருத்தப்பட்டது.

திருமலையில் நடந்து வரும் பிரம்மோற்சவத்தில் அனைவரின் பங்களிப்பும் இருக்கும் வேண்டும் என இந்த பாரம்பரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1952-ஆம் ஆண்டு முதல் தங்கத் திருக்குடையை நாவிதா்கள் சமா்ப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com