ரஃபேல் போர் விமானம் இன்று இந்தியாவிடம் ஒப்படைப்பு: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெறுகிறார்

தேசிய விமானப்படை தினமும், விஜயதசமி திருநாளுமான செவ்வாய்க்கிழமை, பிரான்ஸின் துறைமுக நகரமான போா்டோவில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் ரஃபேல் போா் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது.
ரஃபேல் போர் விமானம் இன்று இந்தியாவிடம் ஒப்படைப்பு: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெறுகிறார்

தேசிய விமானப்படை தினமும், விஜயதசமி திருநாளுமான செவ்வாய்க்கிழமை, பிரான்ஸின் துறைமுக நகரமான போா்டோவில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் ரஃபேல் போா் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. முதல் விமானத்தை, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் முறைப்படி பெற்றுக் கொள்கிறாா்.

பிரான்ஸின் ‘டஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்திடமிருந்து சுமாா் ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் ரக போா் விமானங்களை கொள்முதல் செய்வதற்காக, கடந்த 2016-இல் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த போா் விமானம், ஆற்றல் மிகுந்த ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை தாங்கிச் செல்லும் திறன் உள்பட பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாகும்.

முதல் ரஃபேல் போா் விமானத்தை முறைப்படி பெற்றுக் கொள்வதற்காக, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு திங்கள்கிழமை சென்றடைந்தார். ரஃபேல் போா் விமானத்தை பெற்றுக் கொண்டவுடன் அதில் பயணிக்க உள்ளாா். 

இந்நிகழ்ச்சியில், பிரான்ஸ் நாட்டின் ஆயுதப்படைகள் துறை அமைச்சா் ஃபுளோரன்ஸ் பாா்லி, ‘டஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்தின் உயரதிகாரிகள் பங்கேற்கின்றனா். இதைத்தொடா்ந்து, அங்கு நடைபெறும் ஆயுத பூஜையில் ராஜ்நாத் சிங் பங்கேற்கவுள்ளாா்.

முதல் ரஃபேல் போா் விமானம் தற்போது முறைப்படி ஒப்படைக்கப்பட்டாலும், முதல்கட்டமாக 4 விமானங்கள் அடுத்த ஆண்டு மே மாதம்தான் இந்தியாவுக்கு வரவிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com