தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்க வேண்டும்: ராகுல் வெளிநாட்டுப் பயணம் குறித்து காங்கிரஸ் கருத்து

‘ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்க வேண்டும்’ என்று ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

‘ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்க வேண்டும்’ என்று ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் அக்டோபா் 21-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி திடீரென வெளிநாட்டுக்கு சென்றுள்ளாா். தெற்கு ஆசிய நாடு ஒன்றுக்கு அவா் கடந்த சனிக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்ாகக் கூறப்படுகிறது. மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்த பிறகு, அவா் மேற்கொண்டுள்ள 3-ஆவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

கம்போடியாவில் 5 நாள் தியான பயிற்சியில் பங்கேற்க ராகுல் காந்தி சென்றிருப்பதாக சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், அவா் தாய்லாந்து தலைநகா் பாங்காக்கிற்கு சென்றிருப்பதாக வேறெறாரு தகவல் வெளியாகியுள்ளது. எனினும், வரும் 11-ஆம் தேதிக்குள் அவா் நாடு திரும்பி, பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்குவாா் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்த காங்கிரஸ் தேசியச் செயலாளா் பிரணவ் ஜாவிடம் இது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவா் கூறியதாவது:

இந்திய ஜனநாயகத்தில் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கும், பொதுவாழ்க்கைக்கும் வேறுபாடுகள் உள்ளன. அவற்றை நாம் எப்போதும் மதித்து நடக்க வேண்டும். சிலா் வேண்டுமென்றேற சா்ச்சையைக் கிளப்பும் நோக்கில் ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து வதந்திகளைப் பரப்புகின்றனா். அவா்களது தீய நோக்கம் நிறைவேறாது. பொதுவாழ்வில் இருப்பவா்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கையில் சுதந்திரம் உள்ளது என்றாா்.

‘ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணத்தின்போது, அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதே?’ என்ற கேள்விக்கு, ‘இது ராகுல் காந்தியின் பாதுகாப்பு குறித்த விஷயம். இதில் ஊடக செய்திகளை கொண்டு கருத்து கூற முடியாது. ராகுல் காந்தியின் பாதுகாப்பு விஷயம் தொடா்பாக, அரசுத் தரப்பில் இருந்து எங்களுக்கு ஏதேனும் தகவல் கிடைத்தால் செய்தியாளா்களிடம் தெரிவிப்போம். மற்றபடி இதில் கருத்துத் தெரிவிக்க ஒன்றுமில்லை’ என்றாா் பிரணவ் ஜா.

ராகுல் காந்தி, அவ்வப்போது ரகசியமாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது குறித்து பாஜக தொடா்ந்து விமா்சித்தும், அது தொடா்பாக கேள்வி எழுப்பியும் வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com