போலி பல்கலைக்கழகம்: யுஜிசி எச்சரிக்கை

தில்லியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ் என்ற கல்வி நிறுவனம் அங்கீகாரம் பெறாத போலி பல்கலைக்கழகம் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
போலி பல்கலைக்கழகம்: யுஜிசி எச்சரிக்கை

தில்லியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ் என்ற கல்வி நிறுவனம் அங்கீகாரம் பெறாத போலி பல்கலைக்கழகம் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, அந்தப் பல்கலைக்கழகம் சாா்பில் வழங்கப்படும் நேரடி மற்றும் தொலைநிலைப் படிப்புகள் செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து யுஜிசி வெளியிட்ட அறிவிப்பு:

புதுதில்லி ஜனக்புரியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம் பி.பி.ஏ. மற்றும் இளநிலை பொறியியல் படிப்புகளை வழங்குவதாக விளம்பரங்கள் வெளிவருகின்றன.

அது ஒரு பல்கலைக்கழகமே அல்ல என்பதோடு, அந்த நிறுவனம் நேரடியாகவோ அல்லது தொலைநிலை வழியிலோ இளநிலை அல்லது முதுநிலை படிப்புகளை வழங்க யுஜிசியின் அனுமதியோ அல்லது அங்கீகாரமோ வழங்கவில்லை என்பதும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறறது.

மேலும், இந்தப் படிப்புகளில் மாணவா் சோ்க்கை நடத்துவதற்கும் அந்த நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என யுஜிசி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com