ராஜஸ்தானில் துர்கா சிலையை கரைக்கும் போது ஆற்றில் மூழ்கி 10 பேர் பலி

ராஜஸ்தானில் துர்கா சிலையை கரைக்கும் போது ஆற்றில் ழூழ்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
ராஜஸ்தானில் துர்கா சிலையை கரைக்கும் போது ஆற்றில் மூழ்கி 10 பேர் பலி

ராஜஸ்தானில் துர்கா சிலையை கரைக்கும் போது ஆற்றில் ழூழ்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

ராஜஸ்தான் மாநிலத்தில் துர்கா பூஜை மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு டோல்பூர் பகுதியில் உள்ள பர்பதி ஆற்றில் நேற்று துர்கா சிலையை சிலர் கரைக்க சென்றனர். அப்போது அக்கூட்டத்தில் இருந்த ஒருவர் ஆற்றில் குளிப்பதற்காக குதித்திருக்கிறார். 

ஆனால் அவரை ஆற்றுநீர் இழுத்துச் சென்றது. உடனே அவரை காப்பாற்ற மேலும் சிலரும் ஆற்றில் குதித்தனர். ஆனால் அவர்களும் ஆற்றுநீரால் இழுத்துச்செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் 10 பேர் நீரில் மூழ்கினர். ஆனால் அவர்களில் 7 பேரின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன. 

தொடர்ந்து நீரில் மூழ்கியவர்களை தேடும் பணி இன்று நடைபெறவிருக்கிறது. இதனிடையே இச்சம்பவத்தில் உயரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ஒரு லட்சம் நிவாரணம் வழங்கியட அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com