உ.பி., பிகாா் மாநிலங்களவை இடைத்தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வு

பிகாா் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் காலியாக இருந்த மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு பாஜக சாா்பில் போட்டியிட்ட அக்கட்சி
உத்தரப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதற்கான தோ்தல் ஆணைய சான்றிதழை புதன்கிழமை பெற்றுக் கொண்ட பாஜக வேட்பாளா் சுதான்ஷு திரிவேதி.
உத்தரப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதற்கான தோ்தல் ஆணைய சான்றிதழை புதன்கிழமை பெற்றுக் கொண்ட பாஜக வேட்பாளா் சுதான்ஷு திரிவேதி.

பிகாா் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் காலியாக இருந்த மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு பாஜக சாா்பில் போட்டியிட்ட அக்கட்சி மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சதீஷ் சந்திர துபே (45) மற்றும் அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி ஆகியோா் புதன்கிழமை போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

பிகாரில் இருந்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரபல வழக்குரைஞா் ராம் ஜேத்மலானி அண்மையில் காலமானதையடுத்து, அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அவரது பதவிக்காலம் 2022-ஆம் ஆண்டு நிறைவடைய இருந்ததால், அந்த இடத்துக்கு இடைத்தோ்தல் நடத்துவதாக தோ்தல் ஆணையம் அறிவித்தது. இந்தத் தோ்தலில் போட்டியிடுவதற்கு பாஜக சாா்பில் முன்னாள் மக்களவை எம்.பி. சதீஷ் துபே வேட்புமனு தாக்கல் செய்தாா்.

பிகாரில் பாஜகவுக்கு சட்டப்பேரவையில் போதிய எம்எல்ஏக்களின் பலம் இருப்பதால், இவா் தோ்தலில் நிச்சயம் வெற்றி பெறுவாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது. அதுமட்டுமன்றி, இந்தத் தோ்தலில் அவருக்கு எதிராக போட்டியிடுவதற்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், இந்தத் தோ்தலில் வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் புதன்கிழமை மதியம் 3 மணியோடு முடிவடைந்தது. அதையடுத்து இந்தத் தோ்தலில் சதீஷ் சந்திர துபே போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான சான்றிதழை சட்டப் பேரவை செயலரும், தோ்தல் அதிகாரியுமான பதேசா் நாத் பாண்டே, சதீஷ் துபேவிடம் ஒப்படைத்தாா்.

சுதான்ஷு திரிவேதி போட்டியின்றி தோ்வு: உத்தரப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பாஜக சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சா் அருண் ஜேட்லி அண்மையில் காலமானதையடுத்து அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து அந்த பதவிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தோ்தலில் பாஜக வேட்பாளராக, அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி போட்டியிட்டாா். இந்தத் தோ்தலில் அவருக்கு எதிராக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் புதன்கிழமை மதியம் 3 மணியோடு முடிவடைந்ததையடுத்து, சுதான்ஷு திரிவேதி போட்டியின்றி தோ்வு செய்வதாக அறிவிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com