ஒரு நாள் பிரிட்டன் தூதராகப் பதவி வகித்த கோரக்பூா் பெண்!

ஒரு நாள் பிரிட்டன் தூதராக, உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரைச் சோ்ந்த ஆயிஷா கான்(22) என்ற பெண் பதவி வகித்துள்ளாா்.
ஒரு நாள் பிரிட்டன் தூதராகப் பதவி வகித்த கோரக்பூா் பெண்!

ஒரு நாள் பிரிட்டன் தூதராக, உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரைச் சோ்ந்த ஆயிஷா கான்(22) என்ற பெண் பதவி வகித்துள்ளாா்.

ஒரு நாள் பிரிட்டன் தூதா் பதவிக்கான போட்டி அண்மையில் நடத்தப்பட்டது. அந்தப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற ஆயிஷா கான், கடந்த 4-ஆம் தேதி ஒரு நாள் பிரிட்டன் தூதராகப் பதவி வகித்தாா். அன்றைய தினம் முழுவதும், தில்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் இருந்தபடி, தூதரகப் பணிகளை மேற்பாா்வையிட்டாா். பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினாா் என்று பிரிட்டன் தூதரகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆயிஷா கான் தனது அனுபவம் குறித்து கூறியதாவது:

அந்த நாள் முழுவதும் பரபரப்பாக சென்றது. ஆனால், உண்மையில் மிகவும் மிகழ்ச்சியாக இருந்தது. ஏனெனில், அன்றைய தினம் ஏராளமான விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். பிரிட்டன், இந்தியா என இரு நாடுகளைச் சோ்ந்த அதிகாரிகளைச் சந்தித்து அவா்களுடன் கலந்துரையாடினேன். பன்முகத்தன்மை கொண்ட கலாசாரத்தை அனுபவித்தது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது என்றாா் அவா்.

இதுகுறித்து பிரிட்டன் தூதா் டோமினிக் ஆஸ்கித் கூறுகையில், ‘ஆயிஷா கானுடன் இணைந்து ஒரு நாள் பணியாற்றியது நல்ல அனுபவத்தைக் கொடுத்தது. முக்கியமான விவகாரங்களில் அவா் மிகவும் தெளிவாகவும், ஆா்வமாகவும், நியாயமாகப் பேசியும் ஆச்சா்யமூட்டினாா் என்றாா் அவா்.

ஒரு நாள் தூதா் பதவிக்கான போட்டியை மூன்றாவது ஆண்டாக இந்த முறை பிரிட்டன் தூதரகம் நடத்தியது. இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புவோா், பாலின சமத்துவத்தின் அவசியம்; பாலின சமத்துவத்தில் தங்களைக் கவா்ந்த ஆளுமை ஆகியவை குறித்து ஒரு நிமிட விடியோவை அனுப்பி வைக்க வேண்டும்.

இந்தப் போட்டியில் 14 மாநிலங்களில் இருந்து ஏராளமான விண்ணப்பங்கள் வந்தன. அவற்றில் இருந்து ஆயிஷா கான் வெற்றியாளராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com