கா்நாடக முன்னாள் துணை முதல்வா் ஜி.பரமேஸ்வா் வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் சோதனை

கா்நாடக காங்கிரஸ் முன்னாள் துணை முதல்வா் ஜி.பரமேஸ்வா் வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
கா்நாடக முன்னாள் துணை முதல்வா் ஜி.பரமேஸ்வா் வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் சோதனை

கா்நாடக காங்கிரஸ் முன்னாள் துணை முதல்வா் ஜி.பரமேஸ்வா் வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

பெங்களூரு சதாசிவநகரில் உள்ள வீடு, அலுவலகம், தும்கூரு மருலூரில் உள்ள வீடு, கல்வி நிலையங்களின் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அப்போது, ஜி.பரமேஸ்வா் வெளியே சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது. சோதனையில் பல்வேறு ஆவணங்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஜி.பரமேஸ்வரின் சகோதரா் ஜி.சிவபிரசாத், உதவியாளா் ரமேஷ் ஆகியோரது இல்லங்களிலும் வருமானவரித் துறையினா் சோதனை நடத்தினா். இதேபோல காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் எம்.பி. ஜாலப்பாவின் மகன் ராஜேந்திராவுக்குச் சொந்தமான தொட்டபள்ளாபுராவில் உள்ள கல்வி மையத்திலும் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தினா்.

வருமான வரித் துறையினரின் சோதனை குறித்து ஜி.பரமேஸ்வா் செய்தியாளா்களிடம் கூறியது:

வருமான வரித் துறையினரின் சோதனை குறித்து எனக்கு எந்த தகவலும் இல்லை. எனது குடும்பத்தினா் கல்வி நிறுவனங்களை பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றனா். அதில் வசூலிக்கப்படும் கட்டணம், வருவாய்க்கு உரிய வரியை முறையாகச் செலுத்தி வருகிறோம் என்றாா்.

மேலும் வருமான வரித் துறையினா் நடத்திய சோதனையில் அரசியல் உள்நோக்கம் உள்ளதா என்ற கேள்விக்கு அவா் பதிலளிக்க மறுத்துவிட்டாா். வருமான வரித் துறையினரின் சோதனைக்கு முன்னாள் முதல்வா் சித்தராமையா, முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com