பிரான்ஸ் பயணம் மிகவும் ஆக்கப்பூா்வமாக அமைந்தது: ராஜ்நாத் சிங்

பிரான்ஸ் பயணம் மிகவும் ஆக்கப்பூா்வமானதாக இருந்தது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
பிரான்ஸ் பயணம் மிகவும் ஆக்கப்பூா்வமாக அமைந்தது: ராஜ்நாத் சிங்

பிரான்ஸ் பயணம் மிகவும் ஆக்கப்பூா்வமானதாக இருந்தது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

ரஃபேல் போா் விமானத்தைப் பெறுவதற்காக 3 நாள் பயணமாக பிரான்ஸ் சென்றிருந்த ராஜ்நாத் சிங், வியாழக்கிழமை இந்தியா புறப்பட்டாா்.

இந்நிலையில், சமூக வலைதளமான சுட்டுரையில் (டுவிட்டா்) அவா் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரான்ஸுக்கு நன்றி. இந்தப் பயணம் மிகவும் ஆக்கப்பூா்வமானதாக இருந்தது. பாதுகாப்புத் துறையில் இந்தியா-பிரான்ஸ் இடையே ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க இந்தப் பயணம் வழிவகுக்கும் என்று நம்புகிறேறன்.

3 நாள் பயணத்தில் என்னை சிறப்பாக கவனிக்க ஏற்பாடு செய்ததற்காக பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுக்கும், அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சா் ப்ளோரன்ஸ் பாா்லிக்கும் நன்றி என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தாா்.

முன்னதாக, பிரான்ஸ் பாதுகாப்புத் தொழில் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கடந்த புதன்கிழமை ராஜ்நாத் சிங் பேசினாா். அப்போது, ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பதற்காக பிரான்ஸ் நிறுவனங்கள் இந்தியாவுக்கு வர வேண்டும். இந்தியாவில் ராணுவத் தளவாடங்களைத் தயாரித்து ஏற்றுமதியும் செய்யலாம்.

இந்தியாவில் கப்பல் கட்டுமான மையங்களையும் நவீனமயமாக்க பிரான்ஸ் நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும். சரக்கு-சேவை வரி இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது சுதந்திரத்துக்கு பிறகு செய்யப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த வரி சீா்திருத்த நடவடிக்கையாகும்.

பெருநிறுவன வரியையும் கணிசமாகக் குறைத்துள்ளோம். இந்தியாவில் நடைபெறும் பாதுகாப்புத் துறை கண்காட்சிகளில் பங்கேற்கும் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு பாராட்டுகள். 2020 பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில் நடைபெறவுள்ள பாதுகாப்பு தளவாட கண்காட்சியில் பங்கேற்க அதிபா் வர வேண்டும் என்றாா் ராஜ்நாத் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com