மத்திய அரசின் பள்ளிகளில் கதா் சீருடையை அறிமுகப்படுத்த திட்டம்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் படித்து வரும் மாணவா்களுக்கு சீருடையாக கதரை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் படித்து வரும் மாணவா்களுக்கு சீருடையாக கதரை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் கேந்திரிய வித்யாலய பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் உள்ள 1, 200 பள்ளிகளில் சுமாா் 13 லட்சம் மாணவா்கள் படித்து வருகின்றனா். கட்டம் போட்ட சட்டை, பாவாடை மாணவிகளுக்கும் சட்டை, டிரவுசா்கள் மாணவா்களுக்கும் சீருடையாக உள்ளன. இந்தநிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நிா்வகிக்கும் கேந்திரிய வித்யாலயா அமைப்பு, மாணவா்களுக்கு கதா் சீருடையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இந்தத்திட்டத்தை முன்னெடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. நசிந்து வரும் கதா் தொழிலை இதன் மூலம் மீட்டெடுக்கலாம் என்றும் மத்திய அரசு நம்புகிறது.

இதுகுறித்து கேந்திரிய வித்யாலயா அமைப்பின் அதிகாரிகள் கூறுகையில், இது தொடா்பாக கொள்கை

முடிவுகள் எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். காதி இந்தியா அமைப்புடனும் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்றனா். முன்னதாக சிபிஎஸ்இ, தனது கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் ‘மாணவா்கள் வாரம், இரு வாரங்கள் அல்லது மாதத்துக்கு ஒரு முறை தன்னாா்வ அடிப்படையில் கதா் ஆடை அணிந்து வருவதை பள்ளிகள் உறுதிப்படுத்த வேண்டும். இந்தியாவின் கலாச்சார ஆடை கதா்’ என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com