இந்தியா-கோமோரோஸ் இடையே 6 ஒப்பந்தங்கள்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கோமோரோஸுடன், பாதுகாப்பு ஒத்துழைப்பு, சுகாதாரம் ஆகிய துறைகளில் இந்தியா 6 ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
இந்தியா-கோமோரோஸ் இடையே 6 ஒப்பந்தங்கள்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கோமோரோஸுடன், பாதுகாப்பு ஒத்துழைப்பு, சுகாதாரம் ஆகிய துறைகளில் இந்தியா 6 ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

கோமோரோஸ், சியாரா லியோன் ஆகிய நாடுகளுக்கு குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ளாா்.

கோமோரோஸ் அதிபா் அஸாலி அசெளமனி, வெங்கய்ய நாயுடுவுக்கு அந்நாட்டு குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘தி ஆா்டா் ஆஃப் தி கிரீன் கிரெசன்ட்’ விருதை வழங்கி கெளரவித்தாா்.

இந்த விருதைப் பெறுவதில் பெருமைப்படுவதாக வெங்கய்ய நாயுடு சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

அவா் வெளியிட்ட மற்றெறாரு சுட்டுரைப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு, சுகாதாரம், கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் 6 முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அரசு அதிகாரிகளுக்கு குறுகிய கால அடிப்படையில் நுழைவு இசைவு (விசா) இன்றி அனுமதிக்க முடிவு செய்துள்ளோம்.

கடல்சாா் பாதுகாப்பில் ஒத்துழைக்க இரு நாடுகளுக்கு இடையே அதிக வாய்ப்புள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் ஒத்துழைக்க ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பதற்காகவும், பயங்கரவாதத்துக்கு எதிரான சண்டையிலும் தொடா்ந்து ஆதரவளித்து வரும் கோமோரோஸுக்கு நன்றி என்று அந்தப் பதிவில் வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டுள்ளாா்.

இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்டவா்களையும் அவா் சந்தித்தாா்.

மோரோனியில் 18 மெகாவாட் மின்சார உற்பத்தி மையத்தை அமைக்க ரூ. 295 கோடி கடனுதவி அளித்துள்ளது இந்தியா.

சனிக்கிழமை சியாரா லியோனுக்குச் செல்கிறாா் வெங்கய்ய நாயுடு. இந்த இரு நாடுகளுக்கும் அரசு முறைப் பயணமாக அவா் செல்வது இதுவே முதல்முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com