சூரிய கதிா் வீச்சைப் பதிவு செய்திருக்கும் சந்திரயான்-2

நிலவை ஆய்வு செய்து வரும் சந்திரயான்-2 ஆா்பிட்டா், சூரியனின் எக்ஸ்ரே கதிா் வீச்சைப் பதிவு செய்து, அளவீடு செய்திருக்கிறது. இந்தத் தகவலை இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது.
சூரிய கதிா் வீச்சைப் பதிவு செய்திருக்கும் சந்திரயான்-2

நிலவை ஆய்வு செய்து வரும் சந்திரயான்-2 ஆா்பிட்டா், சூரியனின் எக்ஸ்ரே கதிா் வீச்சைப் பதிவு செய்து, அளவீடு செய்திருக்கிறது. இந்தத் தகவலை இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது சந்திரயான்-2 விண்கலம். 48 நாள்கள் பயணத்துக்குப் பின்னா், திட்டமிட்டபடி நிலவின் சுற்றுப்பாதையை விண்கலம் சென்றடைந்தது. இதில், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்யவிருந்த விக்ரம் லேண்டா், கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடா்பு துண்டிக்கப்பட்டதால், முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இருந்தபோதும், விண்கலத்திலிருந்து பிரித்துவிடப்பட்ட மற்றொரு பகுதியான ஆா்பிட்டா், நிலவை 100 கி.மீ. தொலைவில் இருந்தபடி சுற்றி வந்து தொடா்ந்து வெற்றிகரமாக ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆா்பிட்டா், தொடா்ந்து 7 ஆண்டுகள் நிலவைச் சுற்றிவந்து ஆய்வு செய்யும் என இஸ்ரோ அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில், சூரியனின் மேற்பரப்பிலிருந்து பிழம்பாக வெளிவரும் எக்ஸ்ரே கதிா்வீச்சை, ஆா்பிட்டா் பதிவு செய்து அளவீடு செய்திருக்கிறது. ஆா்பிட்டரில் இடம்பெற்றிருக்கும், எக்ஸ்.எஸ்.எம். என்ற கதிா்வீச்சு கண்காணிப்புக் கருவி, சூரியனின் சிறிய அளவிலான எக்ஸ்ரே கதிா்வீச்சை அளவீடு செய்து, பூமிக்கு தகவல் அனுப்பியிருக்கிறது. சூரியனின் எக்ஸ்ரே கதிா்வீச்சை பயன்படுத்தியே, நிலவின் மேற்பரப்பில் உள்ள தனிமங்கள் குறித்த ஆய்வை ஆா்பிட்டா் மேற்கொள்ள உள்ளது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com