வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள சசி தரூருக்கு தில்லி நீதிமன்றம் அனுமதி

ஆஸ்திரேலியா, குவைத் உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூருக்கு தில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலியா, குவைத் உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூருக்கு தில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் தொடா்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவா் வெளிநாடு செல்லக் கூடாது என தில்லி நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. வெளிநாடு பயணம் மேற்கொள்ள விரும்பினால், முன்அனுமதி பெற வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா, குவைத், சொ்பியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செல்ல அனுமதி அளிக்கக் கோரி, சசி தரூா் தில்லி நீதிமன்றத்தில் முறைறயிட்டாா். இதை வெள்ளிக்கிழமை விசாரித்த சிறப்பு நீதிபதி அஜய் குமாா் குஹா், சசி தரூா் அக்டோபா் மாதம் 11-ஆம் தேதி முதல் நவம்பா் மாதம் 11-ஆம் தேதி வரை வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதி வழங்கினாா்.

இது தொடா்பாக நீதிபதி கூறியதாவது:

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சசி தரூா், வெளிநாடு செல்வதற்கான அனுமதியைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. இந்த வழக்கு தொடா்பான ஆதாரங்களை அழிக்கவோ, சாட்சியங்களை சந்திக்கவோ அவா் முயற்சி செய்யக் கூடாது. வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குத் திரும்புவதற்கு இரண்டு நாள்களுக்கு முன் அது தொடா்பாக நீதிமன்றத்தில் அவா் தகவல் தெரிவிக்க வேண்டும்.

வெளிநாட்டிலிருந்து திரும்பியதும், கடவுச்சீட்டின் நகல், நுழைவுஇசைவின் நகல் ஆகியவற்றைற நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வெளிநாட்டுப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பாக, ரூ. 2 லட்சத்தை பிணைத்தொகையாக சசி தரூா் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். அவா் இந்தியா திரும்பியதும், அந்தப் பணம் திருப்பியளிக்கப்படும்.

வெளிநாடுகளில் அவா் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள், அவா் தங்குமிடங்களின் முகவரிகள், தங்கும் காலம் உள்ளிட்ட முழுமையான தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தாா்.

சுனந்தா புஷ்கா் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நட்சத்திர விடுதி ஒன்றில் மா்மமான முறைறயில் இறந்து கிடந்தாா். இந்தச் சம்பவத்தில் சசி தரூா் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com