ராஜபுத்திரர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள 'அரை கிலோ தங்க தலைப்பாகை': விலை எவ்வளவு தெரியுமா!

ராஜபுத்திரர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள 'அரை கிலோ தங்க தலைப்பாகை': விலை எவ்வளவு தெரியுமா!

சுத்தமான 24 காரட் தங்கம் கொண்டு 530 கிராம் எடையில், 9 மீட்டர் நீளத்தில் இந்த தலைப்பாகை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் ராஜபுத்திர வம்சனத்திருக்காக பிரத்தியேகமாக தங்கத்தாலான தலைப்பாகை உருவாக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரை பூர்வீகமாகக் கொண்ட ஆடை வடிவமைப்பாளர் பூபேந்திர சிங் ஷேகாவத் இதனை வடிமைத்துள்ளார்.

ராஜபுத்திர வம்சத்தில் பிறக்கும் ஆண்கள் 'சஃபா' எனப்படும் தலைப்பாகை அணிவது வழக்கம். கடந்த 70 ஆண்டுகள் வரை தங்கத் தலைப்பாகை அணிவதை ராஜபுத்திரர்கள் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். அவ்வகையில் பாரம்பரியமிக்க இந்த தலைப்பாகையை மீண்டும் தற்போது தங்கத்தில் வடிவமைத்துள்ளது தொடர்பாக பூபேந்திர சிங் ஷேகாவத் கூறுகையில்,

இந்த தங்க தலைப்பாகையை உருவாக்க எனக்கு 48 பேர் உதவியுள்ளனர். முதலில் விலை மலிவான செம்பு கொண்டு தயாரித்து பார்த்தோம். பின்னர் வெள்ளி கொண்டு உருவாக்கினோம். இறுதியாக தங்கத்தில் வடிவமைத்துள்ளோம்.

சுத்தமான 24 காரட் தங்கம் கொண்டு 530 கிராம் எடையில், 9 மீட்டர் நீளத்தில் இந்த தலைப்பாகை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com