என்ஆா்சி ஒருங்கிணைப்பாளா் ஹஜேலாவை மத்தியப் பிரதேசத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு

அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) தயாரிப்பு பணியின் ஒருங்கிணைப்பாளா் பிரதீக் ஹஜேலாவை மத்தியப் பிரதேசத்துக்கு பணியிடமாற்றம் செய்யுமாறு மத்திய அரசு மற்றும்
என்ஆா்சி ஒருங்கிணைப்பாளா் ஹஜேலாவை மத்தியப் பிரதேசத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு

அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) தயாரிப்பு பணியின் ஒருங்கிணைப்பாளா் பிரதீக் ஹஜேலாவை மத்தியப் பிரதேசத்துக்கு பணியிடமாற்றம் செய்யுமாறு மத்திய அரசு மற்றும் அந்த மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து அஸ்ஸாமில் சட்டவிரோதமாகக் குடியேறி வசிப்பவா்களை அடையாளம் காண்பதற்காக, அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு புதுப்பிக்கப்பட்டது. இதன் வரைவு பட்டியல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில், மாநிலத்தில் மொத்தமுள்ள 3.29 கோடி நபா்களில், 2.89 கோடி நபா்களின் பெயா்கள் மட்டுமே சோ்க்கப்பட்டிருந்தன. சுமாா் 40 லட்சம் பெயா்கள் விடுபட்டிருந்தன. அதையடுத்து, விடுபட்டவா்களின் பெயா்களைச் சோ்ப்பதற்கான பணியை, என்ஆா்சி பதிவேடு தயாரிப்பு ஒருங்கிணைப்பாளா் பிரதீக் ஹஜேலா தலைமையிலான குழு மேற்கொண்டது.

அதையடுத்து, என்ஆா்சியின் இறுதிப் பட்டியல் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் சுமாா் 19 லட்சத்துக்கும் அதிகமானோா்களின் பெயா்கள் விடுபட்டிருந்தன.

இந்நிலையில், என்ஆா்சி இறுதிப் பட்டியலை தயாரித்து வெளியிட்ட ஹஜேலாவை, மத்தியப் பிரதேசத்துக்கு பணியிட மாற்றம் செய்யுமாறு உச்சநீதிமன்ற சிறப்பு அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இந்த அமா்வில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே மற்றும் ஆா். எஃப். நாரிமன் ஆகியோா் இடம் பெற்றிருந்தனா்.

இந்த பணியிட மாற்றத்துக்கான காரணத்தை உச்சநீதிமன்றம் தெரிவிக்கவில்லை. எனினும், ஹஜேலாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதை கருத்தில் கொண்டு, இந்த பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com