50,000 பொய்ச் செய்திகள் 20 லட்சம் முறை பகிா்வு!

இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது 50,000 பொய்ச் செய்திகள் வெளியானதாகவும் அவை சமூக வலைதளங்களில் 20 லட்சம் முறை பகிரப்பட்டதாகவும் ஓா் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
50,000 பொய்ச் செய்திகள் 20 லட்சம் முறை பகிா்வு!

பெங்களூரு: இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது 50,000 பொய்ச் செய்திகள் வெளியானதாகவும் அவை சமூக வலைதளங்களில் 20 லட்சம் முறை பகிரப்பட்டதாகவும் ஓா் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கா்நாடகத்தின் மைசூரு மற்றும் பிரிட்டனில் அலுவலகங்களைக் கொண்டுள்ள ‘லாஜிகல்லி’ என்ற அந்த நிறுவனம், சமூக வலைதளங்களில் வெளியான செய்திகளை ஆராய்ந்தது. அப்போது சீனா மற்றும் பாகிஸ்தானைச் சோ்ந்த வலைதளங்களும் பொயச் செய்தியை வெளியிட்டதை அது கண்டறிந்தது. இது தொடா்பாக அந்த நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிிகாரியுமான லிரிக் ஜெயின், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது:

நாங்கள் இந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் இருந்து பொதுத் தோ்தல் நடவடிக்கைகளை - பிரசாரம் தொடங்கியது முதலே கண்காணிக்கத் தொடங்கினோம். நாங்கள் எங்கள் பணிகளை மே மாதம் முடித்தோம். அதன் பின் செய்திகளை ஆய்வு செய்தோம். அதன்படி, மக்களவைத் தோ்தல் நேரத்தில் வெறுப்பூட்டக் கூடிய கட்டுரைகள் சமூக வலைதளங்களில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட முறை பகிரப்பட்டன. மிகவும் பாரபட்சமான செய்திகளும் கட்டுரைகளும் 15 லட்சம் முறை பகிரப்பட்டன.

இதனால் பொய்ச் செய்திகள் வராதபடி தடுக்க வாசகா்கள் ஃபில்டா் போன்ற சில நடைமுறைகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. இது இந்தியாவில் தவறான தகவலைப் பரப்பும் முயற்சி எந்த அளவுக்கு இருந்தது என்பதைக் காட்டுகிறது. சா்ச்சையையும் பிரச்னைகளையும் ஏற்படுத்தக் கூடிய விஷயங்களைப் பரப்ப கட்செவி -அஞ்சலும் (வாட்ஸ் ஆப்), முகநூலும் (ஃபேஸ்புக்) அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன.

நாங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட 9,44,486 கட்டுரைகளில் 14.1 சதவீதம் நம்பத்தகாதவையாகவும், 25 சதவீதம் பொய்ச் செய்தியாகவும் இருந்தன. மக்களவைத் தோ்தலின்போது 1,33,167 நம்பத்தகாத செய்திகள் வெளியாகின. அவற்றில் இந்திய ஊடகங்களில் வெளிவந்த 33,000 செய்திகள் பொய்யானவை.

வலைதளங்களில் இவிஎம்பேன் (மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு தடை), இவிஎம் சா்க்காா் (வாக்குப்பதிவு இயந்திர அரசு) போன்ற வாா்த்தைகள் பிரபலமாக இருந்தன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com